சேப்பங்கிழங்கு ரோஸ்ட்

தேதி: July 4, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சேப்பங்கிழங்கு - கால் கிலோ
மிளகாய்ப்பொடி - ஒரு தேக்கரண்டி
கார்ன் ஃப்ளார் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி


 

சேப்பங்கிழங்கை வேகவைத்து உரித்துகொள்ளவும். பெரியதாக இருந்தால் நீளவாக்கில் நான்காகவும், சின்னதாக இருந்தால் இரண்டாகவும் நறுக்கவும்.
அதில் உப்பு, மிளகாய்ப்பொடி, கார்ன் ஃப்ளார் மாவு போட்டு பிசறி அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு பிசறியதை போட்டு சிறு தீயில் உடையாமல் கிளறவும்.
சிறிது நேரத்தில் முறுகலாகி மொறு மொறுவென்று வந்து விடும். தேவையெனில் எண்ணெய் சிறிது ஊற்றிக்கொள்ளலாம்.


மேலும் சில குறிப்புகள்