சாஃப்ட் சிக்கன் வறுவல்

தேதி: July 4, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோழி - அரை கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 3
இஞ்சி - சின்ன துண்டு
பூண்டு - 7 பல்
மிளகாய்ப்பொடி - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகு, சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
தயிர் - அரை கப்
கரம் மசாலாப்பொடி - அரை பொடி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 தேக்கரண்டி


 

வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை தட்டி கழுவிய கோழியில் போட்டு, மஞ்சள் தூள், மிளகாய்ப்பொடி, மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், தயிர் ஆகியவற்றை போட்டு பிசறி ஊற வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கறியை போட்டு கிளறி பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு போட்டு தண்ணீர் வற்றும் வரை கிளறவும்.
அதில் அரை கிளாஸ் தண்ணீர் விட்டு சிறு தீயில் மூடி வேகவிடவும். நன்கு வெந்தவுடன் சுருள கிளறி இறக்கவும்.


தயிரில் ஊறுவதால் கோழி மிகவும் சாஃப்ட்டாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்