ஈஸி போளி

தேதி: July 5, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

மைதா - ஒரு கப்
தேங்காய்ப்பூ - அரை கப்
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி
நெய் - 50 கிராம்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
ஏலக்காய் - 5
வெல்லம் (அ) சர்க்கரை - கால் கப்


 

மைதாவில் உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் எண்ணெய் சேர்த்து இலகுவாக பிசைந்து ஒரு மணி ஊறவைக்கவும்.
ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு தேங்காய்ப்பூ போட்டு வதக்கி, பொடியாக்கிய ஏலக்காய் போட்டு கிளறி இறக்கி தூளாக்கிய வெல்லம் (அ) தூளாக்கிய சர்க்கரை போட்டு பிசறவும்.
மாவை எலுமிச்சையளவு உருண்டைகளாக உருட்டி சப்பாத்திக்கட்டையில் வட்டமாக தேய்க்கவும். அதன் நடுவில் தேங்காய்ப்பூ வைத்து சுற்றிலும் மூடி மறுபடியும் தேய்க்கவும்.
தோசைக்கல்லில் தேய்த்ததை போட்டு சுற்றிலும் நெய் விட்டு வேகவைத்து எடுக்கவும்.


மைதா பூரி செய்ய பிசைந்தமாவு மீந்துவிட்டது. சாயங்காலம் அதில் செய்து பார்த்தேன். போளி நன்றாக வந்தது.

மேலும் சில குறிப்புகள்