காராமணிக்கடைசல்

தேதி: July 6, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

காராமணி/பயிறு - ஒரு கப்
சின்ன வெங்காயம் - 10
அல்லது பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 4
பூண்டு - 4 பல்
சீரகம் - அரை தேக்கரண்டி
தக்காளி - ஒன்று
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மல்லித் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
எண்ணெய் - 3 தேக்கரண்டி


 

முதலில் காராமணிப் பயிறை முதல் நாள் இரவே ஊறவைத்து குக்கரில் 3 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
சின்ன வெங்காயமாக இருந்தால் கூடுதல் சுவை அல்லது பெரிய வெங்காயத்தையும், தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பூண்டையும் சீரகத்தையும் ஒன்றிரண்டாக தட்டிக் கொள்ளுங்கள்.
பிறகு எண்ணெயை காயவைத்து அதில் கடுகு, கறிவேப்பிலை போட்டு பொரிந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள்.
பச்சை வாசனை போனதும் தட்டிய பூண்டு, சீரகம் சேர்த்து வதக்கிய பின் தக்காளி சேர்த்து வதக்குங்கள்.
அதனுடன் மஞ்சள் தூள், மல்லித் தூள் சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து ஒரு வதக்கு வதக்கி வேகவைத்த பயிறை சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து 10 நிமிடம் கொதிக்க விடுங்கள்.
பிறகு தீயைக் குறைத்து விட்டு ஒரு மேஷரால் அல்லது மத்து கொண்டு நன்கு பயிறை மசித்து விட்டு மேலும் 2 நிமிடம் கொதிக்க விட்டால் குழம்பு இறுகி கெட்டியான கிரேவியாக வரும். மிகவும் சுவையான குழம்பு தயார்


செய்வதற்கு மிகவும் சுலபமான சத்தான குழம்பு சாதத்திற்கு அருமையாக இருக்கும். சப்பாத்திக்கும் தொட்டுக்கொள்ளலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் தளிகா,

நேற்று என் அக்கா என் வீட்டுக்கு வந்திருந்த பொழுது உங்கள் குறிப்பை பார்த்துவிட்டு சென்றாள். இன்று காலையில் அவள் செய்து இருக்கிறாள். மிக நன்றாக இருக்கிற்து என்று எனக்கு போன் பண்ணி சொல்லி உங்களுக்கு நன்றியும் தெரிவிக்க சொன்னாள். மிக்க நன்றிபா.

லீலா நந்தகுமார்.

Leela Nandakumar

ஹாய் லீலா..தேன்க் யூ லீலா..பின்னூட்டம் பாத்து ரொம்ப நாளாகிவிட்டதா திடீர்னு பார்க்கவும் ரொம்ப சந்தோஷமா இருக்கு..இது ஒரு கிராமத்து குழம்பு என்றும் சொல்லலாம்.ஒரு கிராமவாசி ஆன்டி சொல்லி தந்தது:-)..நன்றி அவங்களுக்கு.

you are at online. i will try your receipes in future days and will send reply. thank you.

Leela

Leela Nandakumar

lovely
தளிக்கா காராமணி படிக்கும்போதே நன்றாக இருக்கு
செய்துவிட்டு மீண்டும் இதே இடத்துக்கு வருகிரேன்
தாளி இன்னொரு விசயம் என்க்கும்ட்டும் துபை சர்ஜா தோழிகள்யாரேனும்
என்ற பகுதிமட்டும் டு மெனி கான்டெக்ட் என்றுவருது ஏனப்பா
கொஞ்சம் சொல்லு

உன்னை நேசி
உலகம் உன்னை சுவாசிக்கும்.
அன்புடன் மலிக்கா

மலிக்கா எனக்கும் அது அடிக்கடி வரும்.காராமணி குழம்பு சுலபமும் கூட செய்யுங்கள்.

சூப்பர் எங்கோ நான் இது சாப்பிட்ட நினைவு, சரி செய்து பார்க்கலாம் என்று நேற்று இரவு ஊற வைத்து இன்று செய்தேன். சாததிற்க்கு தொட்டு சாப்பிட நன்றாக இருந்தது.

நன்றி விஜி..இதனுடன் கத்தரிக்காயும் சேர்த்து அம்மா செய்வார் அது இன்னும் நல்ல இருக்கும் ஆனால் அது எனக்கு செய்யவும் தெரியாது.நன்றி விஜி

சாதத்திற்கும், சப்பாதிக்கும் நன்றாக இருந்தது.
நாங்க இதை நார்மலா சுண்டல் (பச்சையாக இருந்தால்) அல்லது காரகுழம்பு (காய்ந்ததாக இருந்தால்) தான் செய்வோம். கடைசல் வித்யாசமாக நன்றாக இருந்தது நன்றி.

indira

நன்றி இந்திரா.. இது டயட்டில் இருப்பவர்களுக்கும் கொடுக்கலாம்..இதனை சொல்லித் தந்தவர் செய்தால் அதன் சுவை மறக்க்வே முடியாது..சின்ன வெங்காயமும் அம்மிக் கல்லும் மத்தும் எல்லாம் உபயோகித்து செய்து முடித்தால் த்திக்காக இருக்கும்..உடனே தீர்ந்து விடும் அந்த மணமே தனி.

தளிகா காராமணி கடைசல் நல்லா இருந்தது.மிகவும் ஹெல்தியும் கூட. புது விதமான குறிப்புக்கு நன்றி.

நன்றி மாலி.எனக்கும் சந்தோஷம்

ஹாய் தளிகா,
உங்க காராமணி கடைசல் போன சனிக்கிழமை செய்தேன். ரொம்ப டேஸ்ட்டியாக சூப்பரா இருந்தது. இரவு சப்பாத்திக்கும், அடுத்த நாள் சாதத்திற்க்கும் ரொம்ப பொருத்தம்.
எனக்கு இந்தமாதிரி டூ-இன் -ஒன் ரெஸிப்பின்னா ரொம்ப பிடிக்கும்! : )
நன்றி தளிகா!

அன்புடன்
ஸ்ரீ

அன்புடன்
சுஸ்ரீ

ஹாய் ஷ்ரீ என்னை அடியுங்க நல்லா..நான் வாங்கிக்க கடமைபட்டிருக்கேன்..ஹிஹீ
சும்மா ஒவ்வொரு குறிப்பா எடுத்து பார்த்தேன் கண்ணில் பட்டது.உங்களுக்கு கோவம் வரலையா நன் பதில் போடலேன்னு?கவனிக்கலை
நன்றி ஷ்ரீ..எனக்கும் ரொம்ப இஷ்டம் டூ இன் வன் குழம்பு..நானும் அதே மாதிரி சப்பாத்தி சாதத்துக்கு தான் செய்வேன்.எனக்கும் ரொம்ம்பைஷ்டம்.