புல்லு கொழுக்கட்டை

தேதி: July 7, 2008

பரிமாறும் அளவு: 5 -6 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

புல்லு(கம்பு) - 1/2 கிலோ
பனங்கருப்பட்டி - 1/2 கிலோ
தேங்காய் (பெரியது) - 1
ஏலத்தூள் - 1/2 டீஸ்பூன்
சுக்குத்தூள் - 1/2 டீஸ்பூன்


 

புல்லை நன்கு கல், தூசி இல்லாமல் சுத்தம் செய்து அரவை மிஷினில் கொடுத்து மாவாக்கவும்.
தேங்காயை சன்னமாகத் துருவிக்கொள்ளவும்.
கருப்பட்டியை மூழ்கும் அளவு நீர் ஊற்றி பாகு காய்ச்சவும். முதல் நிலை பாகுப்பதம் வந்ததும், அனைத்துப் பொருட்களையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கிளறவும்
கொழுக்கட்டை பிடிக்கும் பதத்திற்கு கெட்டியாக வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.
இதை முதல் நாள் இரவே தயார் செய்து மறுநாள் காலை கொழுக்கட்டை செய்தால்தான் ஷாஃப்டாக வரும்.
சிறு, சிறு கொழுகட்டைகளாக பிடித்து ஆவியில் நீண்ட நேரம் வேகச் செய்யவும்.
மற்ற கொழுக்கட்டையைவிட இது வேகுவதற்கு நேரம் எடுக்கும்.
மிகவும் டிரெடிஷனல் ஆன இது. புல்லு என்றால் என்னவென்றே தெரியாத நம் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் சுவையுடன் கூடிய சத்தான பதார்த்தம் சாப்பிட்ட திருப்தி கிடைக்கும்


மேலும் சில குறிப்புகள்