நெய் சோறு

தேதி: July 8, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.7 (3 votes)

 

பெரிய தேங்காய் - ஒன்று
அரிசி - 4 கப்
ஏலக்காய் - 4 அல்லது 5
கிராம்பு - 3
பட்டை - 2 துண்டு
முந்திரி - ஒரு கை பிடி
கிஸ்மிஸ் - பாதி கை பிடி
நெய் - 5 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அரிசியை தண்ணீர் ஊற்றி களைந்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
தேங்காயை துருவி எடுத்துக் கொண்டு அதை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து 2 அல்லது 3 முறை அரைத்து 8 அல்லது 9 கப் தண்ணீர் கலந்த பால் எடுத்துக் கொள்ளவும்.
சுத்தம் செய்து கழுவி வைத்திருக்கும் அரிசியுடன் தேங்காய் பாலை ஊற்றவும்.
வாணலியில் நெய்யை ஊற்றி காய்ந்ததும் ஏலக்காய், கிராம்பு, பட்டை போட்டு தாளித்து எடுத்துக் கொள்ளவும்.
தாளித்தவற்றை அரிசி மற்றும் தேங்காய் பால் கலவையுடன் கொட்டி கிளறி விடவும்.
அதன் பிறகு இந்த கலவையுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கி விடவும்.
இதை பாத்திரத்துடன் எடுத்து ரைஸ் குக்கரில் வைத்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும் கிஸ்மிஸ், முந்திரியை போட்டு மூடி விடவும். சாதம் வெந்ததும் திறந்து கரண்டியால் கிளறி விட்டு சூடாக பரிமாறவும்.
எளிதில் செய்யக் கூடிய நெய் சோறு தயார். மர்ழியா அவர்களின் குறிப்பில் இருக்கும் சிக்கன் கிரேவி, கத்திரிக்காய் மாங்காய், முட்டை ஆகியவை இதனுடன் சாப்பிட நல்ல சைட் டிஷ்.
அறுசுவையில் குறிப்புகள் வழங்கி வரும் <b> திருமதி. மர்ழியா </b> அவர்கள் நேயர்களுக்காக இந்த நெய் சோறை செய்து காட்டியுள்ளார்.

ரைஸ் குக்கர் இல்லாதவர்கள் மேல் சொன்னவாறு அனைத்தையும் செய்துக் கொண்டு சாதாரண குக்கரில் போடவும். தீயை அதிகமாக வைத்து நன்கு கொதி வந்ததும் தீயை குறைத்து விடவும். சிறிது நேரம் கழித்து கிஸ்மிஸ், முந்திரி போடவும். சிம்மில் வைத்தே வேக விடவும். வெயிட் போட தேவையில்லை. வெயிட் போடும் அந்த துளையின் வழியாக புகை வந்ததும் வெந்ததா என்று பார்க்கலாம். வெந்ததும் திறந்து நன்கு கிளறி விட்டு இறக்கி பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எப்படி இதை சொல்லறதுன்னு யோசிப்பேன்... எனக்காக சொன்னதுக்கு நன்றி!!! இதுக்கு பதில் வருமா வந்தா திட்டிக்கலாம்ன்னு இருந்தேன்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

சதாலட்சுமி
பட்டர் பன்னீர் மசாலா எப்படி செய்வது, தயவுசெய்து சொல்லுங்களேன். என் மகனுக்கு ரொம்ப பிடிக்கும்.
நான் ஒரு தடவை செய்தேன் சரியாக வரவில்லை.

சதாலட்சுமி

கதீஜா அந்த ஜெ,இலா கூட்டத்தில் நீயுமா சேர்ந்துட்டே?அடேங்கப்பா என்னமா கோபம்..நான் இப்ப அந்த கட்டத்தில் இருந்து தாண்டிட்டேன் அதனால்தான் அப்ப கூட 1 , 2 தான் பயம் வேணாம் கேராதான் இருகேன்,இருப்பேன் டெலிவரி வரை!

இலா மெயில் பார்க்கவும்..

சுமஜ்லா ஹாய்! உங்க பெயர் ரொம்பவே டிப்ரண்டா,அழகா இருக்கு..வாங்க நீங்களும் கலந்துக்கலாம்...

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஓஹ் அனைவரின் பெயருமே ரொம்பவே டிப்ரண்ட் அதோட நல்லா இருக்கு..எனக்கு இப்படிபட்ட பெயர் ரொம்பவே பிடிக்கும்..உங்க மற்ற ஆசைகள்,அரட்டைலாம் இன்னும் பார்கல இனிதான் பார்கனும்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

நீங்க பன்ன நெய் சோறு மற்றும் சிக்கன் கிரேவி இன்று பன்னேன் ரொம்ப அறுமையா இருந்தது..இரண்டும் நல்ல காம்பினேஷன்..நன்றி மர்ழியா..

டியர் கீதா...சிக்கன் மர்றும் நெய்சோறு இரண்டையுமே செய்தீர்களா ரொம்ப சந்தோச்மாக இருக்குமா...உங்க மின்னூட்டத்திற்க்கு ரொம்ப நன்றி :)

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்லி ஆன்லைனா?

"We judge ourselves by what we feel capable of doing, while others judge us by what we have already done."

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

enakku time illai thamil il type seyya ila online il vara mudiyala ingku oree virus ppa..google il wait seythuttu irukkeen vaangka angku..seekkiram ila ennaal utkaaravee mudiyala...illainaa monday doctor tta pooy vawthathum mail kodukkiReen take care

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு