பயத்தம் பருப்பு ரசம்

தேதி: April 1, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பயத்தம் பருப்பு - ஒரு கரண்டி
புளி - எலுமிச்சங்காய் அளவு
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 15
சீரகம் - அரை தேக்கரண்டி
தேங்காய் - கால் மூடி
உப்பு - சிறிதளவு
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து


 

பருப்பில் தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும்.
தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை தோலுரித்து பொடி பொடியாக நறுக்கி வைக்கவும்.
தேங்காய், வெங்காயம், சீரகம் சேர்த்து அரைக்கவும்.
தண்ணீரில் புளியை ஊற வைத்து கரைத்து அதனுடன் பருப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் அரைத்த கலவைகளைப் போட்டு உப்பு சேர்த்து கரைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை போட்டு வெடித்ததும் ரசக் கலவையை ஊற்றிக் கொதித்தபின் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்