ஈஸி சோள கட்லெட்

தேதி: July 9, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சோளம் - 2 கப்
நறுக்கின கொத்தமல்லி - கால் கப்
பச்சை மிளகாய் - 4
சீரகம் – அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
பொட்டுக்கடலை - அரை கப்
புதினா - 10 இலை
பிரெட் தூள் - அரை கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 4 தேக்கரண்டி


 

புதினா இலைகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
சோளத்தை உதிர்த்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் கொத்தமல்லி தழை, பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், சீரகம், கரம் மசாலா ஆகியவற்றை போட்டு அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் அரைத்து வைத்துள்ள அந்த கலவையுடன் சோளத்தை சேர்த்து கொர கொரப்பாக அரைத்து எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் சோளம் சேர்த்து அரைத்த கலவையை போட்டு அதனுடன் நறுக்கின புதினா, உப்பு, பிரெட் தூள் சேர்த்து பிசைந்து வைக்கவும். சோளத்தை அரைக்கும் போது வெளிவரும் தண்ணீர் அளவிற்கு ஏற்றாற்போல் பிரெட் தூள் சேர்க்கவும்.
இந்த கலவை சப்பாத்தி மாவு பதத்தில் இருக்கும். அதை சிறிய உருண்டைகளாக உருட்டி விருப்பத்திற்கு ஏற்ற வடிவில் தட்டிக் கொள்ளலாம், அல்லது கட்லெட் அச்சியில் வைத்து செய்துக் கொள்ளவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து மேலே எண்ணெய் தடவி அதில் செய்து வைத்திருக்கும் கட்லெட்டை போட்டு மேலே சிறிது எண்ணெய் ஊற்றி 3 நிமிடம் வேக விடவும்.
அதன் பிறகு அடுப்பினை மிதமான தீயில் வைத்து கட்லெட்டுகளை திருப்பி போட்டு 2 அல்லது 3 நிமிடம் வேக வைத்து கருகவிடாமல் எடுக்கவும்.
எளிதில் செய்யக் கூடிய ஈஸி சோள கட்லெட் ரெடி. இதனை தக்காளி சாஸுடன் பரிமாறலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
அறுசுவை உறுப்பினரான <b> திருமதி. கீதா ஆச்சல் </b> அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக இந்த ஈஸி சோள கட்லெட்டை செய்து காட்டியுள்ளார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இதற்கு Frozen corn பயன் படுத்தலாமா?

Thanks

Take time to laugh.It is the music of the soul.v can use frozen corn?

Arunbala? i dont understand ur comment?

ஹாய் gayu & Arunbala
Sorry pa .நான் இப்பொழுது தான் இதை பார்த்தேன்.
நீங்கள் Frozen corn பயன்படுத்தாலம். ஆனால் இதில் தண்ணீர் கொஞ்சம் அதிகமாக இருக்கும்.
அதனால் நீங்கள் சிறிது கூடுதலாக ப்ரெட் தூள் சேர்த்து கொள்ளவும்.

with love,
Geetha Achal