வத்தல் குழம்பு (செட்டிநாட்டு காரக்குழம்பு)

தேதி: July 10, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (12 votes)

 

மணத்தக்காளி வற்றல் (மிளகுதக்காளி வற்றல்) - 2 தேக்கரண்டி
புளி - எலுமிச்சையளவு
மிளகாய் பொடி - ஒரு தேக்கரண்டி
தனியா பொடி - ஒரு தேக்கரண்டி
சோம்பு, சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 10 பல்
தக்காளி - 2
கறிவேப்பிலை (இருந்தால்) - ஒரு கைப்பிடி
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
பெருங்காயப்பொடி - கால் தேக்கரண்டி


 

புளியை ஊறவைத்து 2 கிளாஸ் கரைக்க வேண்டும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், பெருங்காயம் போட்டு தாளித்து மிளகு தக்காளி வற்றலை போட்டு பொரிந்தவுடன் உரித்த முழு வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.
அதில் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து மசிய வதக்கவும். பிறகு மிளகாய் பொடி, தனியா பொடி, சோம்பு, சீரகப்பொடி போட்டு சிறு தீயில் 5 நிமிடம் வதக்கவும்.
புளித்தண்ணீரை ஊற்றி உப்பு போட்டு கொதிக்கவிடவும். கொதித்து எண்ணெய் மிதந்தவுடன் இறக்கவும்.


மஞ்சள், சோம்பு, சீரகத்தூள் அரைக்கும் முறை கொடுத்துள்ளேன்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அம்மா,

எப்படி இருக்கீங்க.கேட்டவுடன் காரக்குழம்பு ரெஸிபி தந்துட்டீங்க.ரொம்ப நன்றி அம்மா.செய்துவிட்டு பின்னூட்டம் அனுப்புகிறேன்.

Madam,i would like to try this recipe soon.

மணத்தக்காளி வற்றல் என்பதும்,மிளகுதக்காளி வற்றல் என்பதும் same- ஆ அல்லது வெவ்வேறா.

சின்னவெங்காயம்,பூடு,தக்காளி போன்றவற்றை கிராம் அளவில் தாருங்களேன்.

சோம்பு சீரகத்தூள்,வெந்தயம்,
பெருங்காயப்பொடி போன்றவற்றில் நீங்கள் கொடுத்திருக்கும் ஸ்பூன் அளவு என்பது டீஸ்பூனா அல்லது டேபிள்ஸ்பூனா.

இந்த குழம்பிற்கு சைட்டிஷ்ஷாக உங்கள் குறிப்புகளில் எது நன்றாக இருக்கும்.

நன்றி.

இரண்டும் ஒன்றுதான்.
எல்லாமே டீஸ்பூன் அளவுதான்.
வெங்காயம் 50கி, தக்காளி 100கி, பூண்டு 50கி
இதற்கு சைட்டிஷ் கூட்டு வகைகள், அப்பளம். பருப்பு துவையல், மிளகாய்ப்பொடி போடாமல் செய்யும் பொரியல், கீரை ஆகியவை நன்றாக இருக்கும்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

உங்களின் தெளிவான பதிலுக்கு மிகவும் நன்றி.

உங்கள் குறிப்புகளை பார்வையிட்ட போது வத்தல் குழம்பு பொடி இருந்தது.அந்த பொடியை இந்த குழம்பிற்கு உபயோகிக்கலாமா.எத்தனை டீஸ்பூன் சேர்க்க வேண்டும்.

வத்தக் குழம்பு பொடி சேர்ப்பதாக இருந்தால்,இந்த பொடிகளில் எதெல்லாம் (தனியா பொடி,மிளகாய் பொடி,சோம்பு சீரகத்தூள்,பெருங்காயப் பொடி)சேர்க்கக் கூடாது.

முழு வெங்காயம்,முழு பூடு போட்டு தானே வதக்க வேண்டும்.

விரைவில் செய்து பார்க்க விரும்புகிறேன்.நன்றி.

வத்தல் குழம்பு பொடி போட்டு செய்வதென்றால் 5தேக்கரண்டி போடவேண்டும். ஏனென்றால் அதில் பருப்பு வகைகள் சேருவதால் காரம் இருக்காது. ஆனால் சூப்பராக இருக்கும்.பெருங்காயம் சேர்க்கவேண்டும்.
முழுவெங்காயம், முழுபூண்டாகத்தான் போடவேண்டும். வற்றல் இருந்தால் வெந்நீரில் 5நிமிடம் ஊறவிட்டு பிழிந்து போடலாம்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

தெளிவான பதிலுக்கு மிகவும் நன்றி. உங்க செட்டிநாடு காரக்குழம்பு இன்று செய்தோம்,உங்கள் வத்தல் பொடி உபயோகித்து.டேஸ்ட் ரொம்ப சூப்பர்.ரொம்ப பிடித்திருந்தது.இனி அடிக்கடி செய்வோம்.மிக்க நன்றி மேடம்.

வத்தக்குழம்பு செய்து நன்றாக இருந்தது என்று பின்னூட்டம் அனுப்பியதற்கு நன்றி.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை