வற்றல் குழம்பு (2)

தேதி: July 10, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

மாவற்றல் (அ) கத்தரி வற்றல் - 5
கொத்தவரை வற்றல் - 6
வத்தக்குழம்பு பொடி - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 5 பல் (இருந்தால்)
பெருங்காயப்பொடி - கால் தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி


 

ஒரு கிளாஸ் அளவு வெந்நீரில் வற்றலை ஊறவைத்து பிழிந்து எடுக்கவும். புளியை 2 கிளாஸ் தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், வெந்தயம் தாளித்து முழு வெங்காயம், பூண்டு போட்டு வதக்கி வற்றல் குழம்பு பொடி, மஞ்சள் தூள், உப்பு போட்டு சிறு தீயில் வதக்கவும்.
புளியை ஊற்றி வற்றலை போடவும். கொதித்து குழம்பு வற்றி எண்ணெய் மிதந்தவுடன் இறக்கவும்.


வற்றல் குழம்பு பொடி தயாரிக்க கொஞ்சமாக எல்லாவற்றையும் எடுத்து மிக்ஸியிலும் அரைத்து வைத்து கொள்ளலாம். இதே பக்குவத்தில் முருங்கைக்காய், கத்தரிக்காய், வதக்கிய வெண்டைக்காய், பரங்கிக்காய், வேகவைத்த பிடி கருணைக்கிழங்கு, ஆகியவற்றை எண்ணெயில் வதக்கும் போது நன்கு வதக்கி பிறகுபொடி சேர்த்து வைக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்