மொச்சைப்பயறு குழம்பு (காய்ந்த பயறு) | arusuvai


மொச்சைப்பயறு குழம்பு (காய்ந்த பயறு)

food image
வழங்கியவர் : saraswathi
தேதி : வியாழன், 10/07/2008 - 12:58
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :

 

 • மொச்சைப்பயறு - 100 கிராம்
 • வெங்காயம் - 50 கிராம்
 • தக்காளி - 3
 • மிளகாய் பொடி - 2 தேக்கரண்டி
 • மல்லிப்பொடி - 2 தேக்கரண்டி
 • மஞ்சள், சோம்பு, சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
 • புளி - எலுமிச்சையளவு
 • உப்பு - தேவையான அளவு
 • தேங்காய் - 2 சில்
 • எண்ணெய் - 3 தேக்கரண்டி
 • கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
 • வெந்தயம் - அரை தேக்கரண்டி

 

 • ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து வெந்தயத்தையும் போட்டு தாளிக்கவும்.
 • பிறகு வெங்காயம், தக்காளி போட்டு வதங்கியவுடன் மிளகாய் பொடி, மல்லிப்பொடி, மஞ்சள் தூள், சோம்பு, சீரகத்தூள், உப்பு போட்டு சிறு தீயில் கிளறி புளித்தண்ணீரை ஊற்றி மொச்சையை போடவும்.
 • நன்கு கொதித்தவுடன் தேங்காயை அரைத்து ஊற்றவும். தேங்காயும் கொதித்தவுடன் இறக்கவும்.
மொச்சையை ஊற வைக்காமல் கடாயில் வறுத்து வேக விட்டும் குழம்பு வைக்கலாம்.