தட்டப்பயறு குழம்பு (காராமணி பயறு)

தேதி: July 10, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தட்டப்பயறு - 100 கிராம்
வெங்காயம் - 50 கிராம்
தக்காளி - 2
மிளகாய்ப்பொடி - 2 தேக்கரண்டி
மல்லிப்பொடி - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள், சோம்பு, சீரகப்பொடி - அரை தேக்கரண்டி
புளி - எலுமிச்சையளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
தேங்காய் - 2 சில்


 

தட்டப்பயறு வறுத்து வேகவிடவும். வெந்தவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி போட்டு கொதிக்கவிடவும்.
பிறகு மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி, மஞ்சள்தூள், சோம்பு சீரகத்தூள் போடவும். புளியை கரைத்து ஊற்றி உப்பு போட்டு கொதிக்கவிடவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் தாளித்து குழம்பில் கொட்டவும். தேங்காய் அரைத்து ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கவும்.


மொச்சை வேகவைத்த தண்ணீரை மட்டும் கீழே ஊற்றவும். அந்த ஸ்மெல் நன்றாக இருக்காது. முருங்கைக்காய், கத்தரிக்காய் வேண்டுமென்றால் எல்லா பயறு குழம்பிலும் கட் பண்ணி வதக்கும்போது சேர்த்து வதக்கவும். தேங்காய் ஊற்றாமலும் குழம்பு வைக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்