கிரிஸ்பி வெஜ் போண்டா

தேதி: July 10, 2008

பரிமாறும் அளவு: 6 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா - 1 கப்
அரிசி மாவு - 1/2 கப்
கார்ன்ஃப்ளார் - 1/4 கப்
கோஸ் - 100 கிராம்
கேரட் - 1
பேபி கார்ன் - 6
பீன்ஸ் - 6
வெங்காயம்- 2
பச்சை மிளகாய் - 3
சமையல் சோடா - 1 பின்ச்
உப்பு - 2 டீஸ்பூன்
சில்லி ப்ளேக்ஸ் - 2 டீஸ்பூன்
சமையல் எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு


 

வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் பொடிப்பொடியாக நறுக்கவும். பேபி கார்னை வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்
மற்ற காய்களையும் மெலிதாக நறுக்கிக் கொள்ளவும்.
சிறிதளவு நீரில் உப்பு, சில்லி ப்ளேக்ஸ் ,2 டேபிள் ஸ்பூன் எண்ணெய், சமையல் சோடா சேர்த்து கலக்கவும்.
வெங்காயம் உட்பட அனைத்துக் காய்களையும் சேர்க்கவும். கடைசியாக மாவு வகைகளை சேர்த்து போண்டா மாவு பதத்திற்கு கெட்டியாக பிசையவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடேறியதும் போண்டாக்களாக போட்டு சிவக்கும் வரைப் பொரித்து எடுக்கவும்.
அதீத கிரிஸ்பியாக இருக்கும் இந்த வெஜ் போண்டாவுக்கு தேங்காய் சட்னி பொருத்தமாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்