குமாயம்

தேதி: July 12, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி - அரை ஆழாக்கு
பாசிப்பருப்பு - 2 ஆழாக்கு
உளுத்தம்பருப்பு - கால் ஆழாக்கு
வெல்லம் - அரை கிலோ
நெய் - 250 கிராம்


 

பச்சரிசி, பாசிப்பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை தனித்தனியே பொன்னிறமாக வறுத்து ஒன்றாக கலந்து மிஷினில் அரைக்கவும். (அ) கொஞ்சம் கொஞ்சமாக தேவையானதை மட்டும் மிக்ஸியில் அரைக்கவும். மாவை சலித்துக்கொள்ளவும்.
வெல்லத்தை பொடியாக தட்டி சிறிது தண்ணீர் தெளித்து பாகாக்கி வடிகட்டவும். அடிகனமான பாத்திரத்தில் நெய்யில் பாதியை விட்டு மாவைப் போட்டு சுருள கிளறவும்.
பிறகு வெல்லப்பாகை ஊற்றி அடிப்பிடிக்காமல் கிளறிக்கொண்டேயிருக்கும்போது மீதி நெய்யை கொட்டி சிறு தீயில் கிளறி தொட்டால் ஒட்டாமல் வரும் வரை கிளறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

சரஸ்வதி மேடம், இந்த குறிப்பை கொடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ். நான் சிறு வயதில் இதனை எங்கள் பாட்டி கிராமத்தில் அவர்கள் செய்து தர சாப்பிட்டிருக்கிறேன். இந்த குறிப்பை அப்போதே அவர்களிடம் கேட்டேன். ஆனால் சரியாக ஞாபகம் இல்லை. அப்புறம் நான் அதனை தொதல் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது உங்களது குறிப்பைப் பார்த்ததும்தான் அதன் பேர் குமாயம் என்று ஞாபகம் வந்தது. நிச்சயம் செய்து பார்த்துவிட்டு பின்னூட்டம் அனுப்புகிறேன். தாங்கள் அளிக்கும் குறிப்புகள் அனைத்தும் நன்றாக இருக்கின்றது.

தேவா, செய்து பார்த்து எப்படி இருந்தது என்று தெரிவியுங்கள். ஆஸ்திரேலியாவில் எங்கு இருக்கிறிர்கள்.
என் பையன் மெல்பர்னில் இருக்கிறான். சொந்த ஊர் எது.
ரெசிப்பி எல்லா நன்றாக இருக்கிறது என்று வாழ்த்தியதற்கு நன்றி.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

நான் நிச்சயம் செய்துப் பார்த்துவிட்டு சொல்கிறேன். நான் ஆஸ்திரேலியாவில் ப்ரிஸ்பேனில் இருக்கிறேன். உங்கள் மகனைப் பார்க்க வரும்போது நிச்சயம் என் வீட்டுக்கு வாங்க. என்னை வாங்க போங்கன்னெல்லாம் கூப்பிடாதீங்க. உங்க பொண்ணு மாதிரி வா போன்னே கூப்பிடுங்க. எனக்கு செட்டிநாடு சமையல்னா ரொம்ப இஷ்டம். உங்க சமையலில் சிறப்பு அதுதான்னு போட்டிருக்கீங்க. ஊரில் இருந்தா உங்க வீட்டுக்கு ஒரு ட்ரிப் அடிக்கலாம் போலிருக்கு. எனக்கு சொந்த ஊர் கும்பகோணம். மார்ச் மாசம்தான் ஊருக்கு போயிட்டு வந்தேன். மறுபடியும் இந்த வருஷ கடைசியில் போவேன்னு நினைக்கிறேன். முடிஞ்சா அறுசுவை கெட் டு கெதருக்கு ஏற்பாடு பண்ணி எல்லாரும் பார்க்கலாம். எனக்கு பதில் அனுப்பியதற்கு நன்றி.

நான் முதல்முறை ஆஸ்திரேலியா வரும்போது பையன் பேச்சுலர். இரண்டாவது முறை மருமகளுக்கு பிரசவம் பார்க்க மே2007 வந்தேன். இந்த தீபாவளிக்கு அங்கு வரலாம் என்றிருக்கிறோம். பார்க்கலாம் வந்தால் கட்டாயம் வருகிறேன். பையன் வரச்சொல்கிறான். எல்லாம் ஒழுங்குபடுத்தி விட்டு வரவேண்டும். திருமணம்
ஆகிவிட்டதா. சினேகிதிகளுடன் இருக்கிறாயா.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை