ஈஸி கேரட் அல்வா

தேதி: July 12, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கேரட் - கால் கிலோ
பால் - கால் லிட்டர்
சர்க்கரை - கால் கிலோ
நெய் - 50 கிராம்
முந்திரி - 6
திராட்சை - 10 கிராம்


 

கேரட்டை துருவிக் கொள்ளவும். கனமான கடாயில் நெய் விட்டு முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்துவிட்டு, கேரட்டை போட்டு வதக்கவும்.
பிறகு காய்ச்சிய பாலை ஊற்றி வேகவிடவும். கேரட் வெந்து பால் வற்றியவுடன் பின்ச் உப்பு போட்டு, சர்க்கரை சேர்த்து கிளறும்போது முந்திரி, திராட்சையை போட்டு சுருள கிளறி இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்