மஷ்ரூம் வறுத்த மசாலா

தேதி: July 12, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

பட்டன் மஷ்ரும் - கால் கிலோ
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 3
சீரகம் - ஒரு தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
வரமிளகாய் - 4
மல்லி (தனியா) - ஒரு தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
பட்டை - ஒன்று
அன்னாசிப்பூ - ஒன்று
பூண்டு - 6 பல்
இஞ்சி - ஒரு சின்ன துண்டு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

வெங்காயம், தக்காளி இரண்டையும் தனித்தனியே அரைத்து எடுக்கவும். மிளகாய், மிளகு, தனியா, பட்டை, அன்னாசிப்பூ, பூண்டு, இஞ்சி, சீரகம், சோம்பு ஆகியவற்றை மையாக அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு அரைத்த வெங்காயம், உப்பு போட்டு சிறிது வதக்கி தக்காளி போட்டு வதக்கி, அரைத்த மசாலா, மஞ்சள் தூள் போட்டு சுருள வதக்கவும்.
எண்ணெய் மிதந்து வரும்போது காளானை இரண்டாக (அ) நான்காக நறுக்கி போட்டு சிறு தீயில் கிளறும் போது தண்ணீர் விட்டு வரும். காளான் வெந்து மசாலா திக்கானதும் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்