பீர்க்கங்காய் வேர்கடலை கறி

தேதி: July 12, 2008

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (4 votes)

 

பீர்க்கங்காய் - ஒன்று பெரியது (பிஞ்சுக்காய் பார்த்து வாங்கவும்)
வெங்காயம் - ஒன்று (1/2 பகுதியாக வெட்டி மீண்டும் அதில் 1/2 பகுதியாக வெட்டி பிறகு நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்)
தக்காளி - ஒன்று (துண்டுகளாக நறுக்கியது)
பச்சைமிளகாய் - ஒன்று (இரண்டாக கீறியது)
அரைக்க:
வேர்க்கடலை - 1/2 கப் (தோல் நீங்கிவறுத்தது)
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன்
கசகசா - 1/2 டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கீற்று
உப்பு - தேவைக்கேற்ப


 

பீர்க்கங்காயை தோல் நீக்கி மெல்லிய வட்டவடிவில் நறுக்கிக்கொள்ளவும், வெங்காயம், தக்காளி மற்றும் பச்சைமிளகாய் இவற்றை மேலே கூறியது போல நறுக்கிக் கொள்ளவும்.
வேர்க்கடலையை தோல் நீக்கி வெறும் வாணலியை சூடாக்கி அதில் போட்டு 2 முறை பிரட்டி எடுக்கவும்.
பின்னர் மிக்ஸியில் வேர்க்கடலை, அதனோடு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கசகசா சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்,
பின்னர் வெங்காயம், தக்காளி இவற்றை முதலில் வதக்கவும், வதங்கிய பின் பீர்க்கங்காயை போட்டு வதக்கவும்.
அந்த கலவையில் மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து மூடிப்போட்டு மிதமான தீயில் வேக வைக்கவும்.
பீர்க்கங்காய் கலவை வெந்து வரும்போது அரைத்த கலவையை சேர்த்து கிளறி ஒரு நிமிடம் எல்லாமும் சேர்ந்து வருமாறு கலந்து விடவும். இப்போது சுவையான பீர்க்கங்காய் வேர்க்கடலை கறி தயார்.


பீர்க்கங்காய் வேகவைக்க தண்ணீர் சேர்க்க தேவையில்லை.

மேலும் சில குறிப்புகள்