குரக்கன் (கேழ்வரகு) ரொட்டி

தேதி: July 14, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

இந்த குரக்கன் ரொட்டியை செய்து காட்டியவர், இலங்கைத் தமிழரான <b> திருமதி. நர்மதா </b> அவர்கள். இவர் இலங்கை சமையல் மட்டுமன்றி, மெக்ஸிகன், இத்தாலியன் என்று பல்வேறு நாட்டு உணவு வகைகளையும் தயாரிப்பதில் திறன் மிக்கவர். கைவினைப் பொருட்கள் செய்வதிலும் திறன் வாய்ந்தவர். தெளிவான படங்களுடன் கூடிய இவரது குறிப்புகள் மிகவும் எளிதாகவும் இருக்கும்.

 

குரக்கன் (கேழ்வரகு) மாவு - 1 1/2 கப்
சிவப்பு அரிசி மாவு - 3/4 கப்
சர்க்கரை(வெல்லம்) - 3/4 கப்
பெரிய வாழைப்பழம் - 2
உப்பு - ஒரு சிட்டிகை


 

வெல்லத்தை நசுக்கி தூள் செய்துக் கொள்ளவும். தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, சிவப்பு அரிசி மாவு, பொடித்த வெல்லம், தோல் உரித்த வாழைப்பழம் மற்றும் உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து போட்டுக் கொள்ளவும்.
இந்த கலவையுடன் தண்ணீர் சேர்க்காமல் நன்கு பிசைந்து உருட்டி வைத்துக் கொள்ளவும். பிசையும் போது வெல்லம், வாழைப்பழம் இரண்டையும் நன்கு மசித்து விட்டு பிசையவும்.
உருண்டையாக உருட்டி வைத்திருக்கும் மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக தனித்தனியாக உருட்டி வைக்கவும்.
அதன் பின்னர் ஓவ்வொரு உருண்டையாக எடுத்து சப்பாத்தி கட்டையில் வைத்து வட்டமான ரொட்டிகளாக தட்டிக் கொள்ளவும்.
அடுப்பில் தோசைக்கல் அல்லது ஒரு பானை வைத்து தட்டி வைத்திருக்கும் ரொட்டிகளை போட்டு இரு பக்கமும் வெந்ததும் எடுக்கவும்.
சுவையான குரக்கன் ரொட்டி தயார். இதை பக்க உணவு எதுவும் இல்லாமல் அப்படியே சாப்பிட்டலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்