தக்காளி ஹல்வா

தேதி: July 16, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

நன்கு பழுத்த சிவப்பு நிற தக்காளி - அரை கிலோ
சர்க்கரை - 300 கிராம்
வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
நெய் - இரண்டு மேசைக்கரண்டி
ஏலக்காய் - நான்கு
உப்பு - ஒரு பின்ச்
பாதாம் - 10
முந்திரி - 5
பிஸ்தா - 4
அக்ரூட் - 4
உப்பு - ஒரு பின்ச்


 

பாதாமை மிக்ஸியில் போட்டு பொடி செய்து எடுத்துக் கொள்ளவும். மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
தக்காளியின் கொண்டை பகுதியை மட்டும் நறுக்கி விட்டு குக்கரில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் வரும் வரை வேக விடவும்.
தக்காளி வெந்ததும் எடுத்து தோலை உரித்து விட்டு கைகளால் அல்லது ப்ளெண்டரால் நன்கு பிசைந்துக் கொள்ளவும். அதில் ஏலக்காய், உப்பு, வெண்ணெய் போட்டு கிளறி வேக விடவும்.
அதன் பின்னர் வெந்துக் கொண்டிருக்கும் தக்காளியில் பொடி செய்த பாதாம் மற்றும் ஒரு மேசைக்கரண்டி நெய் சேர்த்து கிளறவும்.
இந்த தக்காளி கலவையில் சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
சர்க்கரை கரைந்து தண்ணீர் பதத்திற்கு ஆகும் அதனால் சில நிமிடங்களுக்கு ஒரு முறை கிளறி விட்டு தண்ணீரை சுண்ட விடவும்.
ஒரு வாணலியில் இரண்டு மேசைக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் பிஸ்தா, முந்திரி, அக்ரூட், கிஸ்மிஸ் பழம் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதை இந்த தக்காளி கலவையில் சேர்த்து கிளறி இறக்கவும்.
சுவையான தக்காளி ஹல்வா ரெடி. அறுசுவையில் 400க்கும் அதிகமான சமையல் குறிப்புகள் மற்றும் பயனுள்ள வீட்டு உபயோகக் குறிப்புகள் கொடுத்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள <b> திருமதி. ஜலிலா </b> அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ள குறிப்பு இது.

இந்த தக்காளி ஹல்வா இஸ்லாமிய இல்லங்களில் விசேஷங்களின் போது செய்வது. இது புளிப்பு இனிப்பு சுவையுடன் வித்தியாசமாக இருக்கும். இதில் மில்க் மெயிட் சேர்த்தும் செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

யக்காவ் நீங்க தேடிட்டு இருந்த மர்றொரு குறிப்பை அட்மின் போட்டுடார் ஆமா பையனை கானோமே?இதை எங்க ஊரில் கிச்சடின்னு சொல்லுவோம் நெய் சோற்றுக்கு விருந்தில் வைப்பாங்க..வீட்டிலும் செய்வோம்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய் மர்லியா துபாய் வந்தாச்சு ஆனா நெட் ஸ்லோவா இருக்கு எல்லாம் நல்ல இருக்கீங்களா?
இந்த தக்காளி ஹல்வா பிரியாணி சாப்பிட்டதும் உடனே சாப்பிட்டால், ஈசியா டைஜெஸ்ட் ஆகும். ரொம்ப நல்ல இருக்க்கும் உள்ளே போறது தெரியாது.
ஜலீலா

Jaleelakamal

என்னக்கா துபாய் போய் எவ்லோ நாள் ஆச்சு ஆனா ஆளையே கானோம்..நல்லா பேசி எழுதலாம்னு நினைத்தே தப்பிச்சீங்க..ஆமாம் நானும் இதை செய்வேன் எப்படி இருக்கு குரல் சரியாகிட்டா?ஜெ.மாமி போன் போட்டாங்களா?தளிகா நைட்டுதான் பேசினா என்னுடன் விசாரித்தா அனைவரையும்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்லியா துபாய் வந்ததும் என் இனிமையான குரல் மீண்டும் வந்து விட்டது.
வர வரேன் மெதுவா வரேன்.வீட்டில் தான் இருக்கேன்.
ஜலீலா

Jaleelakamal

இன்று என் தோழி (அவருக்கு தமிழ் தெரியாது, நான் மொழிபெயர்த்து கொடுப்பது உண்டு எப்போதும்) இதை செய்து பார்க்கிறார். நாளை எப்படி இருந்தது என்று சொல்கிறேன். நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அச்சச்சோ.... சூப்பரு..... ரொம்ப சூப்பரு. பட்டய கிளப்பிடோம்ல...

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

டியர் வனிதா
தக்காளி ஹல்வா
என்ன பட்டைய கிளப்பிட்டீங்களா எப்படி நாக்க முக்க பாடியா ஹ ஹா ஹா ஹி

இது என் கிரான்மாவிற்கு ரொம்ப பிடித்த ஹல்வா இது
அவங்க இதை செய்து சாப்பிடும் போது அவர்கள் ஞாபகல்ம் வரும்.செய்வதுரொம்ப சுலபம்.
ஜலீலா

Jaleelakamal

ஹாய் ஜலீலா அக்கா,
நான் இன்று த க்காளி ஹல்வா செய்ய இருக்கிறேன்,எதில் நீஎங்கள் கோண்டேன்செட்மிழ்க் சேர்த்து செய்யலாம் என்று குறிப்பிட்டு இருக்கிறிர்கள்,அது எப்படி என்று கூறவும்.
நன்றி
ஜயந்திவிநய்

ஜெயந்தி நீங்க என்ன கேட்கிறீங்க புரியல

கோண்டேன்செட்மிழ்க் ?

Jaleelakamal

sweetened condensed milk(milk maid)
vaany

i asked abt condensed milk,(milk maid)u mentioned it in the recipe