கத்தி ரோல்

தேதி: July 17, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா - 2 கப்
உருளைக்கிழங்கு - 4
கொத்தமல்லி - சிறிது
வெங்காயம் - ஒன்று
பச்சைமிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
மிளகாய்ப்பொடி - அரை தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி


 

உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து கொள்ளவும். கிழங்கை மசித்து, அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, உப்பு, மிளகாய்ப்பொடி, கரம் மாசலாப்பொடி ஆகியவற்றை சேர்த்து பிசையவும்.
மைதாவை பிசைந்து ஊறவைக்கவும். பின் சப்பாத்தி போல் தேய்த்து தோசைக்கல்லை சூடாக்கி போட்டு இருபுறமும் வெந்தவுடன் எடுத்து நடுவில் உருளை மசாலாவை வைத்து சுருட்டி பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்