தக்காளி சப்பாத்தி

தேதி: July 17, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (2 votes)

 

தக்காளி ப்யூரி - அரை கப்
கோதுமை மாவு - ஒரு கப்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு


 

கோதுமை மாவில் மஞ்சள் தூள், மிளகாய்ப்பொடி, உப்பு, எண்ணெய், தக்காளி ப்யூரி போட்டு பிசைந்து அரைமணி நேரம் ஊறவைக்கவும்.
மாவை சப்பாத்தி போல் கனமாக தேய்த்து தோசைக்கல்லை சூடாக்கி போட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

அன்பு சகோதரி சரஸ்வதி எப்படி இருக்கீங்க?இந்த வாரம் உங்களுடைய குறிப்புகளை சமைத்து சுவைக்கும் வாய்ப்பு கிடைத்தது, அதில் இந்த தக்காளி சப்பாத்தியும் செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது நன்றி.