கத்தரிக்காய் பச்சடி

தேதி: July 17, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

 

கத்தரிக்காய் - கால் கிலோ
புளி - ஒரு சொளை
மிளகாய்ப்பொடி - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - ஒரு துளி
வெங்காயம் - ஒரு
சோம்பு - கால் தேக்கரண்டி
எண்ணெய் - 50 மில்லி


 

புளியை ஒரு கிளாஸ் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். மிளகாய்ப்பொடி, மஞ்சள் தூள், உப்பு, சர்க்கரை ஆகியவற்றை புளிக்கரைசலில் கரைக்கவும்.
பொடி கத்தரிக்காயாக வாங்கி இரண்டாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு 4 பீஸாக போட்டு பொரித்தெடுக்கவும்.
எல்லாவற்றையும் பொரித்தவுடன் சோம்பு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் வதக்கி, புளிக்கலவையை ஊற்றி கொதிக்கவிடவும்.
கொதித்து வற்றும் போது பொரித்த கத்தரிக்காயை போட்டு கொதித்து எண்ணெய் மிதந்ததும் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

சரஸ்வதி அக்கா கத்தரிக்கா பச்சடி சூப்பர் .புரியாணி்யுடன் சாப்பிட்டேன்.மிக்க நன்றி.
சுரேஜினி

சரஸ்வதி அக்கா உங்களுடைய குறிப்பில் கத்தரிக்காய் பச்சடி மிக மிக சுவையாக இருந்தது அத்துடன் இப்படிப்பட்ட சுவையான குறிப்பை தந்ததிற்கு உங்களுக்கு என் நன்றியை தெரிவிக்கின்றேன் .

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"