வெள்ளி பாத்திரம் பளிச்சிட!

என்ன சகோதரிகளே, ஊருலேருந்து வந்ததும் வராததுமா சந்தேகமா என்று நினைகிறிர்களா?! : )

என்ன செய்ய.. 4 வாரத்துக்கு பிறகு என் வீட்டு பூஜை அறை வெள்ளி பாத்திரமெல்லாம் பாவமா கருப்பா இருக்கு... (சும்மாவே இங்கு இருக்கும் கிளைமேட்டுக்கு சீக்கிரம் கலர் கருத்து போவது போல இருக்கும்... ) இப்ப ஒரு மாசம் கேப்....

அதான், எதாவது டிப்ஸ் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று இங்கு கேட்கிறேன். ப்ளீஸ், வெள்ளி பாத்திரம் பளிச்சிட என்ன வழி என்று கூறுங்களேன். தேங்ஸ்!!

பழப்புளியை தேய்த்தால் எல்லாமே மின்னும்.

என்றென்ரும் அன்புடன்
சுபாஷினி

be happy

வெள்iஎசாமான் பளிச்சிட
பாத்திரகடையில் கிடைக்கும் ரூபெரியை வாங்கி தேய்த்து பருங்கள். பளீச்தான் போங்கள். பிரகு அடிக்கடி நீங்கள் சபீனா போட்டு தேய்க்கலாம்

சாதாரணமாக நீங்கள் உபயோகிக்கும் பாத்திரம் தேய்க்கும் பொடியோ லிக்விடோ கொண்டு தேய்த்து, துடைத்து விட்டு ஒரு மெல்லிய துணியால் வீபூதியைத் தொட்டு தேய்த்தால் வெள்ளி பளபளக்கும்.
உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீர், தோல் கொண்டு வாஷ் செய்தால் வெள்ளி பளிச்சிடும் என்றுகேள்விப்பட்டிருக்கிறேன்.
ஆம்வேயில் AMWAY இதற்கென லிக்விட் விற்கிறார்கள். நான் உபயோகித்ததில்லை.
அன்புடன்
ஜெயந்தி மாமி

சில்வர் காயில் பேப்பரை சின்னசின்னதாக பிய்த்து கொதிக்கு வெந்நீரில் போட்டு கொதிக்கவிட்டு வினிகர் விட்டு பாத்திரங்களை போட்டு வைத்து ஆறியபிறகு எடுத்து தேய்த்தால் பளிச்சென்று ஆகிவிடும். [அ]டூத் பேஸ்ட் போட்டு தேய்த்தால் பளிச்சென்று ஆகிவிடும்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

வெள்ளிப் பாத்திரம் பள பளக்க பூந்தி கொட்டையை நீரில் ஊற வைத்து விரல்களால் கசக்கினால் நுரை வரும்.அந்த நுரையில் வெள்ளியை ஊற வைத்து மிருதுவான பிரஷ்சினால் தேய்த்து கழுகினால் வெள்ளிப் பொருட்கள் பளிச் என மின்னும்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

வெள்ளிப்பாத்திரங்கள் பளப்பளப்பாக இருக்க ஒரு கிண்ணத்தில் விபூதியை போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு மிக்ஸ் பண்ணிக்கொள்ளுங்கள். ஒரு காட்டன் துணியால் விபூதியை தொட்டுக்கொண்டு பத்திரத்தில் நன்றாக தேய்த்தால் கறை நீங்கி பாத்திரம் பளிச் என்று ஆகிவிடும். இப்படி செய்தால் பாத்திரத்தில் கீறல் எதுவும் விழாது.

வெள்ளி பாத்திரம் பளிச்சிட டிப்ஸ் கொடுத்த அனைவருக்கும் ரொம்ப நன்றி!.
ரொம்ப உபயோகமான டிப்ஸ்...

அன்புடன்
சுஸ்ரீ

வெள்ளி பாத்திரம் பளிச்சிட கோல்கேட் Tooth paste (normal one) or powder உபயோகித்து பாருங்கள். நான் அதை தான் உபயோகிக்கிறேன். Pril Liquid கூட பண்ணலாம். அதுவும் நன்றாக பளிச்சிட உதவும்

Priya Lokesh

Priya Lokesh

வெள்ளி பாத்திரம் பளிச்சிட கோல்கேட் Tooth paste (normal one) or powder உபயோகித்து பாருங்கள். நான் அதை தான் உபயோகிக்கிறேன். Pril Liquid கூட பண்ணலாம். அதுவும் நன்றாக பளிச்சிட உதவும்

Priya Lokesh

Priya Lokesh

வெள்ளி பாத்திரம் பளிச்சிட கோல்கேட் Tooth paste (normal one) or powder உபயோகித்து பாருங்கள். நான் அதை தான் உபயோகிக்கிறேன். Pril Liquid கூட பண்ணலாம். அதுவும் நன்றாக பளிச்சிட உதவும்

Priya Lokesh

Priya Lokesh

மேலும் சில பதிவுகள்