ஆலு டொமேட்டோ சப்ஜி

தேதி: July 19, 2008

பரிமாறும் அளவு: 2 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உருளைக்கிழங்கு - 3
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 3
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 4
மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - 3/4 தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
கடுகு, உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை, மல்லி இலை - சிறிதளவு


 

உருளைக்கிழங்கை மிக பொடியாக நறுக்கி வைக்கவும்.
வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும். பூண்டை தட்டி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம், நறுக்கிய உருளைக்கிழங்கு, பச்சைமிளகாயை சேர்த்து 3 நிமிடம் நன்கு வதக்கவும்.
பின் தக்காளி சேர்த்து வதக்கி, எல்லாத் தூளையும் சேர்த்து உப்பு அரை கப் நீர் சேர்த்து 7 நிமிடம் கொதிக்க விடவும்.
பின் கறிவேப்பிலை, மல்லி இலை சேர்த்து இறக்கி சூடாக பரிமாறவும்.


இது சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை என எல்லாவற்றிற்கும் பொருந்தும். சுவையாகவும் மிக எளிதில் செய்யக் கூடியதாகவும் இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

மஹிஸ்ரீ, ஆலு டொமேட்டோ சப்ஜி செய்வதற்கு மிகவும் சுலபமாகவும், சுவை அருமையாகவும் இருந்தது...

நன்றி :)

முற்றுபுள்ளி அருகில் நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால் முடிவென்பதும் ஆரம்பமே (^_^)

கீறி வைத்த முட்டையா

தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி.இப்போது மாற்றிவிட்டேன்.

ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........

ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........