ஹைய்யா...ஜாலி......வாங்க...அரட்டை அடிக்கலாம் பாகம் எட்டு

அரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க
லாம்..சந்தோசமா இருக்கலாம்..

ஏழாம் பதிப்பு 80 ஐ தாண்டி விட்டது அதனால் பாகம் எட்டில் அனைவரும் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்..சந்தோசமா பேசுங்க இதில்...

பிரியத்துடன்,
மர்ழியா

குழந்தை தூங்கி விட்டதா?தூங்கி எழுந்தால் சரியாகி விடும் கவலைப் படாதீர்கள்.நானும் என் குழந்தைகளின் சின்ன வயதில் இப்படித்தான்..ஒன்று என்றால் படபடப்பாகி விடுவேன்.மர்யத்துக்கு அல்லாஹ் லேசாக்குவான்.காலையில் எழுந்ததும் டாண் என உற்சாகமாக வளைய வருவாள் பாருங்கள்

arusuvai is a wonderful website

பாப்பாக்கு இப்ப எப்படி இருக்கு? கலங்க வேண்டாம். ஏதாவது காலில் குத்தியதா எனப் பாருங்கள்,அல்லது மகளிடம் கேளுங்கள்.24 மணி நேரத்துள் 3 முறைக்கு மேல் வாந்தி எடுத்தால் அவசியம் வைத்தியரிடம் செல்லுங்கள்.உடம்பு காய்ந்தால் பாரசிடமோல் கொடுங்கள்.எங்கேனும் விழுந்தாலா என்பதையும் பாருங்கள். அதை விட தைர்யமாக நீங்கள் இருப்பது அவசியம் . காலிற்கு இதமாக சுடு நீரில் கழுவிஉப்பு ஒத்தடம் கொடுங்கள்.

பாப்பாக்கு இப்ப எப்படி இருக்கு? கலங்க வேண்டாம். ஏதாவது காலில் குத்தியதா எனப் பாருங்கள்,அல்லது மகளிடம் கேளுங்கள்.24 மணி நேரத்துள் 3 முறைக்கு மேல் வாந்தி எடுத்தால் அவசியம் வைத்தியரிடம் செல்லுங்கள்.உடம்பு காய்ந்தால் பாரசிடமோல் கொடுங்கள்.எங்கேனும் விழுந்தாலா என்பதையும் பாருங்கள். அதை விட தைர்யமாக நீங்கள் இருப்பது அவசியம் . காலிற்கு இதமாக சுடு நீரில் கழுவிஉப்பு ஒத்தடம் கொடுங்கள்.

சில சமயங்களில் காய்ச்சல் அதிகமானால் கால்வலி வரும்.Iodex போன்ற தயலம் தேய்த்து, வீட்டில் ஹேர் ட்ரையர் இருந்தால் லேசாக 2அல்லது 3 நிமிடங்கள் காட்டலாம். வீக்கம் இருந்தால் ஐஸ் ஸினால் ஒத்தடம் கொடுக்கலாம். இது எல்லா வயது பிள்ளைகளுக்கும் செய்யலாம். உங்கள் பெண் வயது என்ன? சளி முன்பே பிடித்து இருந்ததா? ஒன்றும் ஆகாது கவலையையும் பயத்தையும் விட்டு விட்டு பரபரப்பு இல்லாமல் தைரியமாக பிள்ளையை கவனியுங்கள். நீங்கள் பயந்தால் பிள்ளையும் மிகவும் பயப்படும்.
தமிழி அன்புடன்.

howz mariyam now? give some massage to her legs.apply some iodex,

மர்ழி,மர்யம் இப்போது எப்படி இருக்கிறது?காய்ச்சல் விட்டுவிட்டதா?கால் வலி இல்லாமல் இருக்கிறதா?சீக்கிரம் நலம் என பதில் அளிப்பீர்கள் என் நம்புகின்றேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

மர்யம் எப்படி இருக்கா? டாக்டர் கிட்ட போனீங்களா? எப்படி இருக்கிறாள் இப்போ? வலி குறைந்திருக்கா? நல்லாதானே ஸ்கூல் போய்கிட்டு இருந்தா ஸ்கூல்ல கேட்டிங்களா எங்கவாவது விழுந்தாளான்னு. சீக்கிரம் சரியாகிடும் கவலை வேண்டாம் காலுக்கு வெந்நீர் ஒத்தடம் ரொம்ப நல்லா இருக்கும் அத செய்ங்க.

என்னம்மா மரியம் இப்ப எப்படி இருக்கிறாள். கால் வலி சரியாச்சா. காய்ச்சல் எப்படி இருக்கு. டாக்டரிடம் காண்பிச்சாச்சா? தைரியமா இருங்க. வந்து சொல்லுங்க.
அன்புடன்
ஜெயந்தி மாமி

இப்பதான் அருசுவையை பார்வையிடுகிறேன் அனைவரும் ரொம்ப ஆதரவா சொல்லி இருக்கீங்க ஆனா நாந்தான் நைட் கவ்வனிக்கல கொஞ்ச நேரம் வெயிட் பன்ணினேன் பதில் இல்லை யாரும் லைனில் இல்லை போலன்னு போயிட்டேன்..குரோஸின் கொடுத்தேன் என் பொண்ணு வேற தூக்கத்திலும் அழுதுட்டே இருந்தா எனக்கு ஒன்னும் ஓடல சடன்னா ஜலீலாக்கா நியாபகம் வந்தது அவங்களுக்கு போன் செய்தேன் அவங்க அம்மா டாக்டர்ட்ட எடுத்து போகனும்ன்னு சொன்னாங்க..இவர் வர ரோம்ப லேட் ஆகிட்டு டைம் பார்காமல் தூக்கிட்டு போனோம் அவ்லோ நேரம் ஓன்னு துடிச்சுட்டு இருந்தவ ஹாஸ்பிடல் போனது வாராவங்க போறவங்ககிட்டலாம் பேச ஆரம்பித்துட்டா எனக்கு ஒன்னும் ஓடலம் டாக்டர் என்னை என்ன நினைப்பார்?டாக்டர்ட்ட போயி அவருக்கு சேக்கன் கொடுத்து அவலா சொல்ல ஆரம்பித்துட்டா எனக்கு இந்த இடத்தில் வலிக்குது காய்சலா இருக்கு வாய் வலிக்குதுன்னு அவர் சிரிக்குறார் நான் என்னத்த சொல்ல பே பேன்னூதான் முழிக்குறேன்..நடக்க வைத்து பார்த்தாங்க பீவர் அதிகமானதான் இப்படி இருக்கலாம் கவலை வேணாம்ன்னு சொல்லிட்டாங்க அப்பதான் நிம்மதியாச்சு...இந்தாபிள்ளைங்களை நம்மவே முடியைரதில்லை.. நல்லா இருந்தா இப்ப திரும்ப சுறுண்டு கிடக்கிறாள் பால் கூட குடிக்கல பீவர் வேற இருக்கு ..நலம் விசாரித்த ஜெ.மாமி.காயத்ரி,jayanthivinay,தமிழி,சாதிகாலத்தா,சுகு அனைவருக்கும் நன்றி

மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்ழியா,மர்யம் எப்படி இருக்கா? டாக்டர் கிட்ட போனீங்களா? சளி முன்பு இருந்தே பிடித்து இருந்ததா அது அதிகமாகி சில சமயம் பிள்ளைகளுக்கு கால்வலியுடன் கூடிய காய்ச்சல் வந்திருப்பதை கேள்விப்பட்டிருக்கின்ரேன்.கவலை வேண்டாம்.சீக்கிரம் சரியாகிடும்.பாப்பாக்கு இப்ப எப்படி இருக்கு?பதில் please......அன்புடன் ரமணி

மேலும் சில பதிவுகள்