ஹைய்யா...ஜாலி......வாங்க...அரட்டை அடிக்கலாம் பாகம் எட்டு

அரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க
லாம்..சந்தோசமா இருக்கலாம்..

ஏழாம் பதிப்பு 80 ஐ தாண்டி விட்டது அதனால் பாகம் எட்டில் அனைவரும் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்..சந்தோசமா பேசுங்க இதில்...

பிரியத்துடன்,
மர்ழியா

ஹாய் அதிரா நலமா?உங்க மெயில் பார்த்தேன் நாளை பதில் அனுப்புகிறேன்
அன்புடன் பிரதீபா

பிரதீபா!
ஒன்றும் அவசரமில்லை. உடல்நிலை சரியானதும் அனுப்பினால் போதும். கிடைத்ததென அறிந்ததும் சந்தோசம். பதிலை ஆறுதலாக முடிகிறபோது அனுப்புங்கள். நான் ஒரு big brother fan( this time its so....ooooo... boring) . இப்போ போய்க்கொண்டிருக்கிறது. அதுதான் பார்த்துப் பார்த்து அவசரமாக ரைப் பண்ணுகிறேன்.
குட் நைற். மீண்டும் சந்திப்போம்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய்,ஹாய்
எல்லோரும் எப்படி இருக்கீங்க?
என்னை ஞாபகம் இருக்கா?
சில இல்ல பல காரணங்களால் அருசுவையில் கலந்துகொள்ளமுடியவில்லை.
இருந்தாலும் முடிந்த வரை ராத்திரி ஆனாலும் அருசுவையை தினமும் படித்து விடுவேன்.
என்ன மகா நீங்க கூப்பிட்டதும் நான் வரலையே கோபமா ? இப்படிகேள்வி கேட்டதால் கோபித்து கொள்ளதிங்க என் உயிர் தோழி ............2மாதமா பல்லுவலி அப்ப அப்ப பயமுறுத்திகிட்டிருந்து,வலி இப்ப யில்ல கியூர் ஆயிட்டேன் என்னை நலம் விசாரித்தற்கு நன்றி.
என் மகனுக்கு ஸ்கூல் அட்மிசன் வேலைய் அதுமட்டுமில்லாமல்,அதிரா மாதிரி நானும் அப்பாப்ப குட்டி டூரென்று இப்படியே பொழுது ஓடியே போச்சு.....

என்ன அதிரா ஒரே டூர்தான் போல ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஜமாயிங்க

விஜி நல்லா அருமையா சொன்னீங்க பள்ளிக்கு போய்வரும் குழந்தைகளை கவனிக்கும் விதத்தை பற்றி. நான் மேல் கழுவி ட்ரெஸ் சேஞ் பண்ணி விட்டுதான் சாப்பிட கொடுப்பேன்

மர்ழியா, மரியம் ரொம்பா ஜாலி லைக் பண்ணி ஸ்கூலுக்கு போரளாப்பா.............

புதுவரவு தோழிகளுக்கு ஒரு ஹாய்

குறிப்பிட்டு laxmi09 கவலைபடாதிங்கப்பா உங்க நிலமை என்னால் புரிந்து கொள்ள முடிகிற்து தனியாக இருக்கிரோம் பேச்சு வார்த்தை கூட ஆளில்லையே கவலையை விட்டு அறுசுவைக்கு தினமும் வந்து பேசி கலக்குங்கப்பா.பாய்
அன்புதோழி,
அஞ்சலி.

naturebeuaty

நான் அறுசுவைக்கு புதிது
என்னையும் உங்களோட சேர்த்துப்பிங்களா
மர்ழியா அக்கா உங்க மகள் சரியாய்ட்டாளா
பாபு அன்னா ரொம்ப நன்றி
எல்லோருடனும் பேச உதவியதற்கு

Thanks to all

ஹாய் அக்கா தாங்க்ஸ்கா என்ன வரவேற்ததுக்கு நீங்க எப்படி இருக்கீங்க? நான் இந்தியாவில் இருக்கிறேன். இன்னும் 6 மாதத்தில் எனக்கு திருமணம் அக்கா அதான் சமையல் கத்துகிட்டு இருக்கேன்.

லெஷ்மி நீங்க சொன்னது போல நானும் சமையல் நல்ல கத்துப்பேன்னு நினைக்கிறேன் அறுசுவையோட ஹெல்பால, கவலை வேண்டாம் சீக்கிரத்தில் நீங்க நல்ல செய்தி சொல்லுவீங்க பாருங்க வேலையெல்லாம் முடிச்சிட்டு அறுசுவைக்கு வந்துடுங்க.

தீபா அக்கா ரீஹா அக்கா நான் அசோகா செய்துட்டேன் சூப்பரா இருந்துச்சுகா. ரொம்ப நன்றிகா நீங்க அட்ரஸ் கொடுத்ததுக்கு. இல்ல தேடிக்கிட்டே இருந்திருப்பேன். அம்மா அப்பா நல்லா இருக்குன்னு சொன்னாங்க ஆனா இந்த வாலு தம்பி தான் சொல்றான் யாரு இந்த அசோகாவ சாப்பிடுவா மனுஷன் சாப்பிடுவானான்னு கேக்குறான் அக்கா.

ஹாய் கவிதாராம் அறுசுவை தோழிகள் சார்பில் உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.வாங்க நீங்களும் வந்து கலக்குங்க.
என்ன மொழி அசோகா செய்து சாப்பிட்டாச்சு போல.உங்கள் திருமணத்திற்கு என்னுடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.அறுசுவை இருக்கும் பொழுது என்ன கவலை சீக்கிரம் சமையல் கத்துகிட்டு போற வீட்டில் அசத்துங்க.

அன்புடன் பிரதீபா

மஹா,
என்ன மஹா நீங்க என் மேல கோபமா இருக்கீங்களா? கோவிக்காதீங்க சாரி வரமுடியல மற்ற என்ன பத்தி சொல்ல விருப்பிம் இல்லாமல் இல்ல நான் காயத்ரிஹரி நான் மீனம்பாக்கத்தில் வசிக்கிறேன் இந்த குறைந்த காலமாக சென்னைவாசி. மஹா நான் இன்னும் படிக்கிறத பத்தி முடிவெடுக்கல மஹா இன்னும் குழப்பமாவே இருக்கு. யுவன் எப்படி இருக்கான்? உங்க பிரசவ அனுபவம் பத்தி படிச்சேன் ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு ஆனா by god's grace இந்த சுட்டி பையன் யுவன் கிடைச்சிட்டானே. உடல் நிலை பரவாயில்லையா?

விஜி எப்படி இருக்கீங்க என்ன ரொம்ப வேலை அதிகமா ரொம்ப வேலை செய்யாதீங்க ரெஸ்ட் எடுத்துட்டு பண்ணுங்க. take care

அதிரா ஊர் சுற்றி முடிச்சி வந்தாச்சா ஊற் சுற்றிய களைப்புல இருக்கீங்களா அதான் அறுசுவை பக்கம் வரது இல்லையா? பசங்க எப்படி இருக்காங்க உங்க தோட்டம் எப்படி இருக்கு?

மர்ழி என்ன மர்யம்க்கு இப்ப எப்படி இருக்கா? ஸ்கூல் போறாளா?நீங்க தான் ரொம்ப பயந்துட்டீங்க போல பசங்களுக்கு ஏதவதுனா துடிச்சு போறது தான் அம்மாவோட குணம்.சளி குறைந்தால் சரியாகிடும் கவலைப்படாதீங்க மர்ழி. ஜலீலா மேடம் எப்படி இருக்காங்க?

ஜெயந்தி மாமி நல்லா இருக்கீங்களா? கை பூரணமா குணமாகிடுச்சா? இருந்தாலும் அந்த கையால கொஞ்ச நாளுக்கு ரொம்ப வெயிட் எல்லாம் தூக்காமல் பார்த்துக்கோங்க மாமி.

என்ன சாதிகா அக்கா ஆளையே காணும் எப்படி இருக்கீங்க?

ஹாய் தீபா நல்லா இருக்கீங்களா?

தளிகா ரீமா எப்படி இருக்கா? உடம்புக்கு என்ன ஆச்சு? எப்போ இந்தியா பயணம்?

புது முகங்கள் லெஷ்மி, மொழி, கோபிகா அப்பறம் பெயர் சொல்லா அனைவரையும் அறுசுவைக்கு வரவேற்கிறேன்.

கொஞ்சம் பிசி. நாளை வருகிறேன்
அன்புடன்
ஜெயந்தி மாமி

சாரிமா நான் இப்ப அவசர சாப்பிங் கிளம்பிட்டு இருக்கேன் வந்து பதில் தாரேன் ரூபி ரீமா மேட்டர் மெசேஜ் போடு

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்