ஹைய்யா...ஜாலி......வாங்க...அரட்டை அடிக்கலாம் பாகம் எட்டு

அரட்டைக்கு எல்லோரும் வாங்க இங்கே....எல்லாம் பேசலாம்...சிரிக்கலாம்...ரசிக்க
லாம்..சந்தோசமா இருக்கலாம்..

ஏழாம் பதிப்பு 80 ஐ தாண்டி விட்டது அதனால் பாகம் எட்டில் அனைவரும் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்..சந்தோசமா பேசுங்க இதில்...

பிரியத்துடன்,
மர்ழியா

அனைவரும் நலமா?என்னால் பல பதிவுகளை பார்க,படிக்கலாம் டைமே கிடைப்பதில்லை என் பொண்ணுக்கு ஜுரம் சரியாகிட்டு ஆனா செம சளி,இருமலா இருக்கு இன்னும் சரியாகல கொஞ்சம் பரவா இல்லை போல இருக்கு சடன்னா ஏறிடுது டாக்டர் வீடுன்னே அழையுறேன்..அவ கஸ்டபடுறதை பார்குறப்ப இன்னும் எனக்கு சோர்ந்து தெம்பு இல்லாமல் ஆகிடுது..காலையில் இருந்து அப்பப்ப வந்து பதில் கொஞ்சம் கொஞ்சமா போட்டுட்டு இருகேன் எப்ப அனுப்ப போறேனோ த்ரியல ஓகே ஸ்டார்ட்..இது ஒரு அவசர பதிவு அரையும் குறையுமா படித்துட்டு போடுகிறேன் திட்டிடாதீங்க யாரும்..

சகீலா பானு அடுத்த மாசமா ரொம்ப சந்தோசம் அல்லாஹ் நல்ல அழகான,அறிவுள்ள,குறைவில்லாத சந்தோசமா பிள்ளையை தருவானாக ஆமீன்..இப்ப எங்கு இருக்கீங்க?டெலிவரி எங்கே?

ஓய் மஹா என்னப்பா எப்படி இருக்கீங்க?மகனுக்கு இப்ப எப்படி இருக்கு/?ஆமாப்பா நம் பிள்ளைகளுக்கு ஒன்னுனா நமக்கு 2 மாதுரி ஏதாவது ஆகிடுது என்ன செய்ய?எனக்கும்தான் அதான் அப்பப்ப வந்து ஒரு எட்டு வந்து அருசுவையை பார்த்துட்டு ஓடிடறேன்..

ஜெ.மாமி,மாலதிக்கா,சார்தா ஆளையே கானோம்?

லஷ்மி 4 மாதம் ஆனதும் குழந்தை அசைய துடங்கும் அந்த சுகமே தனி 6,7 மாசத்தில் உதைக்கும் அய்யோ அவ்லோ சந்தோசம் அனுபவிங்க எல்லா சுகத்தையும்..

புஹஹா அதிரா என்ன வந்தாச்சா?இப்படி அடிக்கடி ஊர் சுற்றுவது நல்ல குடும்ப பெண்ணுக்கு அழகு இல்லை ஒழுங்கா அடக்க ஒடுக்கமா வீட்டில் இருங்க .(எல்லாம் என்னால் போக முடியவில்லையேன்ன பொறாமைதான் :-(
அது என்ன நான் எப்பலம் அருசுவைக்கு வருவதில்லையோ அப்பலாம் நீங்க ஆஜர் ஆகுறீங்க?எனக்கு இந்த உணமை தெரிஜ்சு ஆகனும்

பாவம் இந்த விஜி பொண்ணு என்னத்த பண்னுறாங்களோ மெயில் போடுங்க விஜி டைம் கிடைக்குறப்ப

நம்ம வானதி நம் எல்லோரையும் மிஸ் பண்னுறாங்கலாம் எல்லோரையும் கேட்டாதாக சொல்ல சொன்னாங்க..வாரீங்களா குடும்பத்துடன் வானதி வீட்டுக்கு போகலாம்?

சதிகாலாத்தா எப்படி இருக்கீங்க?பசங்கலாம் சும்கமா?

இதோட ஒரு எழி 2 எலி 3 எலி 4 எலி 5ஜலி வந்தாச்சுப்பா என்னமா கண்ணு ஏன் இவ்லோ நாளா காணோம்?மர்யம் ஸ்கூல் போய் 5 நாள் ஆச்சு அவளுக்கு உடம்பு சரி இல்லை அதனால் புதுசா வீண் பிடிவாதம்லாம் வந்திருக்கு நைட் 12 மணிக்கு இப்பவே வா பீச் க்கு போகனும்னு அடம் இப்படி அர்த்தம் இல்லாமல் நிறைய!

கவிதாராம் வாங்கப்ப வெலகம் அருசுவைக்கு உங்கள் வரவு நல்வரவாகட்டும் அருசுவையிலேயே நான் மட்டும்தான் ரொம்ப அமைதியான வாய் பேசாத நல்ல பொண்னு என்னிடம் பேசுங்க ஆனா என் பழைய பதிவுகளை மட்டும் பார்காம பேசுங்க அதான் நல்லது இல்லைனா பல உண்மை தெரியவரும்! மேலே என் பொண்ணை உடம்பு மேட்டரை சொல்லி இருகேன் பார்ங்க

மொழி கலகுங்க சமையல் செய்து வாழ்த்துகள்

காயு எப்படி இருக்கீங்க?ஆமாப்பா நாமதான் துடிச்சு போகிடறோம் என்ன செய்ய?ஜலீலக்கா சொந்த காரங்க வீட்டுகெல்லாம் ரவுண்ட் கட்டிட்டு இருக்காங்க..இப்ப சொந்தத்தில் கல்யாணம் வேற இருக்கு..

கோபிகாவா புதுசா வந்து இருக்காங்களா?வாங்க கோபிகா கோபிக்காம பேசுங்க எங்களோட (பயந்து ஓடிடாதீங்க எல்லாம் ஜாலிக்குதான்)

கதீஜா அமாப்பா சாட் நாலே இலாவை தேடுவா இலா ஆண்டியை வர சொல்லுன்னு ஏன்னா அவங்கதான் பொறுமையா இவலோட பேசுவாங்க இருவரும் என்னத்ததான் பேசிப்பாங்களோ தெரியாது ஆனா இவ முகத்தில் அவ்லோ சந்தோசம்..அப்புறம் வாய்ஸ் சாட்ன்னா நீ! யாரோட வாய்ஸ் சாட் பேசினாலும் கதீஜா ஆண்டி தாம்மான்னு உன்னைதான் கேட்பா வெளியே போகும் போது உன் டிரஸ்தான் வேணும்னு அடம் அதையும் காணோம் எப்படியோ தேடி எடுத்து போட்டுட்டா எனக்கே சந்தோசம் அதனால்தான் உடனே உனக்க்கு சொன்னேன்..

நர்மதா கன்ஸீவா வாவ் வாழ்த்துகள் நர்மதா மாசம் இப்ப என்ன?

தீபா கணவர் பிறந்தநாளைக்கு என்ன செய்தீங்க ஆன்லைனில் கேட்கனும்னு நினைப்பேன் மறந்துடும் சொல்லுங்க

கே.ஆர்..என்ன செய்யுறே குட்டி சுகமா இப்ப?

இன்னும் பதிவு இருகே எப்ப முடிப்பேனோ?

தளி இப்பதான் உன் பதிவையும் பார்கிறேன்..ஹா ஹா என்னைபோல் ஆகிட்டியா ரொம்ப சந்தோசம் ஹீ ஹீ
நானும் அப்படிதான் இருகேன்..

யாருப்பா அது சாரல் மழைனுலாம் அதிரா வெளில் தாங்கல நீங்க வேற நேற்றுதான் 1 நிமிடம் கொஞ்சமா அழுதுட்டு போச்சு மழை திருநெல்வேலி பக்கம்தான் ரொம்ப சூப்பரா இருக்கும் இப்ப குற்றால சீசனாச்சே!

கே.ஆர் முழு பெயர் சொல்லவா வித் கே.ஆர் பர்மிஷன் ஹ அஹா அப்படியே என்னை அடிக்கலாம் போல வருமே வா வா மனம் நிறைய கொடீட்டு போ ஆப்லைனில்

ரஜினி செம பிஸியில் இருப்பாங்க ஊரில் ஜமாய்ங்க ரஜினி..மெயில் போட்டு இருகேன் பாருங்க

விஜி இலா அந்த மழையை கொஞ்சம் சென்னை பக்கம் அனுப்பி வையுங்க

இங்கு ஒரே பயம்தான் சைகோ கொலகாரன் தினம் ஒரு ஆளை கொன்னுடறான் தினம் ஒரு கொலை பேப்பரில் வருது!

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்ழி,எப்படி இருகின்றீர்கள்?மர்யம் எப்படி இருக்கிறது? அன்னிக்கு சரியாகவே பேச முடியவில்லை.இன்னொரு நாள் இருவரும் ப்ரீ ஆக இருக்கும் பொழுது மீண்டும் பேசுவோம்.இப்பொழுது ஹஸ்ஸுடன் வாய்ஸ் சாட் பண்ணிக் கொண்டே பதிவுகள் போட்டுக் கொண்டே இருக்கிறேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

சீலை இல்லன்னு சின்னாயி வீட்டுக்குப் போனா அவ ஈச்சமுள்ளைக் கட்டிக்கிட்டு எதிர்க்க வந்தாளாம்.
இங்க நாங்களும்தான் பொழுது இல்லாம தவிக்கிறோம்.
மரியம் இருமிக்கிட்டே இருக்காளா? பாத்ரூம்ல போய் தண்ணி கொட்டற வழக்கம் எல்லாம் உண்டா குட்டிப் பெண்ணுக்கு.
அங்க ஒரு பொண்ணுக்கு (ரீமா) உடம்பு சரியாகி இப்ப அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம்.
"சடங்கு" த்ரெட்டில் ஒரு பதிவு போட்டிருக்கேன்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

நான் இப்போ இந்தியாவுல இருக்கேன் வருகிற பிப்ரவரி மாசம் எனக்கு திருமணம். போங்க அக்கா எனக்கு ஒரே வெக்கம் வெக்கமா இருக்கு. அக்கா அது எல்லாம் இல்லைகா நான் நானாவே இருக்கேன். கனவு எல்லாம் எதுவும் இல்லை. எப்பை இருக்காங்களோ ஏத்துக்க பழகிட்டு இருக்கேன். ஏன்னா நிறைய எதிர்பார்ப்போட இருந்து ஏதாவது புல்பில் ஆகலனா ரொம்ப அப்செர் ஆகும்ல தான். ஆமாம் விஜி மேடம் நிறைய வேலைகள் இருக்கு. ஒன்னு ஒன்னா ரெடி பண்ணிகிட்டு இருக்கேன். உங்க வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா? வெகெஷன் எப்போ முடியுது. பசங்க இருந்தாலே ஜாலியா இருக்குல எனக்கு அப்படி இருந்தா ரொம்ப பிடிக்கு. உங்க எத்தனை பசங்க அவங்க பேரு என்ன? சொல்லுவீங்களா?

சாதிகா லாத்தா உங்க சைட் வந்தேன் என் மகள் அப்ப ஆக்டிவா இருந்ததால் சாப்பிங் சென்றோம் வந்த கொஞ்ச நேரத்தில் டல்லாகிட்டா எனக்கும் சாப்பிங் செய்து டயர்ட் சோ வீட்டுக்கு வந்துட்டோம்..
ஆமாம் வேலைன்னு போயிட்டேன் இன்னும் பிரீயான படி இல்லை அவ்வப்போது எட்டிபார்த்தால்தான் உண்டு..வாங்க பிரீயாகும் போது நாம பழகலாம்(சிவாஜி ஸ்டைல்)

ஜெ.மாமி லனிலா 2 நாளா நேக்கும் இருமல் இப்ப படி படியா ஏணி ஏறுது ஹோட்டல் சாப்பாடுக்கு ஆசைப்பட்டு ஒரு ஸ்டார் ஹோட்டல் போய் இருநாளா சாப்டேன் ஆர்வக்கோளாரில் ஐஸ் வாட்டருடன் அது இப்ப அது வேலையை காட்டுது சிசேரியன் பண்னிய இடம் லேசா வலிக்க ஆரம்பித்த் இருக்கு நேக்கு ஏதாவது கை வைத்தியம் ஹாடா இல்லாம தாறேளா மாமி பிளீஸ்..அதோட வெந்நீர் சாப்பிடலமோ?சத்த வந்து சொல்லுட்டு போங்கோ..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்ழி லைனிலா?யாஹூ ஓபனில் தான் இருக்கிறது.யாஹூ ஓபன் பண்ணவும்.இருமலுக்கு பாலில் பனங்கல்கண்டு சேர்த்து சாப்பிடுங்கள்.இரவில் வற்ற காய்ச்சிய பாலில் மிள்குத் தூள் மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிடுங்கள்.சிஸேரியன் பண்ணிய இடத்தில் வலி இப்போது அப்படித்தான் இருக்கும்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

இப்பதான் வாரேன் சாரி லாத்தா அதனால் நீங்க லைனில் வந்ததை கவனிக்கல..ஓகே பண கல்கண்டு வாங்கனும் வாங்கி சாப்டறேன் இது மறந்தே போச்சு எனக்கு நியாபக படுதியதறுக்கு தேங்ஸ்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஓஒ.... மர்ழியா!!!
வானிலை அறிக்கை மாதிரி கரெக்ட்டா சொல்லிட்டீங்க.... திருநெல்வேலியில்தான் மழை என்று... உண்மைதான் அங்கிருந்துதான் எனக்கு தகவல் வந்தது... சாரல் மழை ஆரம்பித்துவிட்டதாக. சென்னைக்கும் தி.வேலிக்கும் அதிக தூரமோ?

நீங்க சொன்னதைத்தான் நானும் நினைத்தேன் அதுஎன்ன நான் இல்லாத நேரம் பார்த்து வரலாமோ... கொஞ்சம் கூட நல்லாவே இல்லை? என்ன ஜலீலாக்காட்டைக் கேளுங்க மர்ழியோட மட்டும் கதைத்தால் போதாதாம் எங்களையும் கொஞ்சம் நினைக்கட்டாம் என்று....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

சீரகத்தை வெறும் கடாயில் கறுப்பாக வறுத்து 2 கிளாஸ் தண்ணீர் விட்டுக் கொதிக்கவிட்டு ஒரு கிளாஸாக சுண்டியதும் இறக்கி வடிகட்டி சிறிது பனங்கல்கண்டு போட்டு சிறிது வெண்ணெய் அல்லது நெய் போட்டு இளம் சூட்டில் குடியுங்கள்.
அப்புறம் கொஞ்சம் வாலை சுருட்டிண்டு ரொம்ப அலையாம இருங்க. சரியா.
வாழ்க வளமுடன்
அன்புடன்
ஜெயந்தி மாமி

என்ன ஆச்சு. உடம்பு பரவாயில்லையா? பழைய உற்சாகத்தைக் காணோமே.
வாழ்க வளமுடன்
அன்புடன்
ஜெயந்தி மாமி

மேலும் சில பதிவுகள்