ஸ்வீட் மாங்காய் கிரேவி

தேதி: July 21, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புளிப்பு இல்லாத மாங்காய் - 3
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
வெல்லம் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
மிளகாய் வற்றல் - 3
உப்பு - சுவைக்கு
எண்ணெய் - 2டீஸ்பூன்


 

மாங்காயைத் தோல் சீவி சற்று திக் ஆக ஸ்லைஸ் பண்ணவும். இதை கத்தியாலேயே ஸ்லைஸ் பண்ணலாம். சிப்ஸ் கட்டரினால் பண்ணினால் ரொம்ப மெலிதான ஸ்லைஸாகிவிடும்.
இந்தமாங்காய் துண்டங்களை உப்பு, மஞ்சள், வெல்லம் தூள் சேர்த்து வேக விடவும்.
வெந்த மாங்காயை கரண்டியால் லேசாக மசித்து விடவும்
வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் தாளிக்கவும்.
அடுப்பை அணைத்து விட்டு மிளகாய்த் தூளை சேர்த்துக் கிளறவும்.
மாங்காயில் தாளிப்பை கொட்டிக் கலக்கவும்.
இனிப்பு, புளிப்பு சுவையுடன் இருக்கும் இந்த கிரேவி, செய்வதற்கு சுலபமாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்