சைனீஸ் ஸ்ப்ரிங் ரோல்

தேதி: July 22, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.5 (2 votes)

 

மைதா - 2 கப்
கார்ன் ப்ளார் - 1/2 கப்
உப்பு - 1 டீஸ்பூன்
பச்சைபயறு - 1/2 கப்
கோஸ் - 100 கிராம்
கேரட் - 1
பீன்ஸ் - 6
குடை மிளகாய் - 1
ஸ்பிரிங் ஆனியன் - 4பீஸ்
செலரி - சிறிதளவு
அஜினமோட்டோ - 1/2 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1 டேபிள்ஸ்பூன்
க்ரீன் சில்லி சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
ப்ரெட் க்ரம்ப்ஸ் - 1/2 கப்
உப்பு - சுவைக்கு
முட்டை - 1
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு


 

முதல் நாளே பச்சைப் பயிறை நன்கு ஊற வைத்து முளைக் கட்டிக் கொள்ளவும்.
காய்கள் அனைத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அகலமான வாணலியில் எண்ணெய் விட்டு கேரட், பீன்ஸ், கோஸ், இவற்றைப் போட்டு வதக்கவும். காய்கள் எண்ணெயில் மட்டுமே வதங்க வேண்டும். நீர் முழுக்க வற்றவைக்கவும்
அதே நேரம் காய்கள் அரைவேக்காடாக வெந்து இருந்தால் போதுமானது.
சாஸ்வகைகள், அஜினமோட்டோ, உப்பு சேர்க்கவும்.
குடை மிளகாய், ஸ்ப்ரிங் ஆனியன், செலரி ஆகியவற்றை பொடியாக நறுக்கி,மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும்.
இப்போது பில்லிங் செய்வதற்கு தேவையான கலவை தயார்.
மைதாவை கார்ன் மாவு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
ஒரு தட்டில் நீரில் நனைத்த துணியை விரித்து வைக்கவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து மெல்லிய தோசை வார்க்கவும்.தோசை சற்று கூட முறுகாமல் லேசாக வெந்ததும் திருப்பிப்போடாமல் ஈரத்துணியின் மீது போட வேண்டும்.
அப்படிப் போடும் போது வெந்த பகுதி கீழேயும் வேகாத பகுதி மேலேயும் இருக்குமாறு தோசை, சுருங்கிப் போகாமலும் விரித்தாற்போல போடவும்.
இந்த தோசை மீது காய்கலவையை போதுமான அளவு நடுவில் வைத்து பக்கவாட்டு பகுதி இரண்டையும் மடக்கவும். பிறகு தோசையின் ஆரம்பதில் இருந்து பாய் போல் ரோல் செய்யவும்.
ரோல் செய்யும் போது உள்ளே வைத்திருக்கும் காய் பிரியாத அளவுக்கு மடக்க வேண்டும்.
தோசையின் சூட்டிலேயே நன்கு ஒட்டிக் கொள்ளும்.இவ்வாறு எல்லா தோசைகளையும் ரோல் செய்து கொள்ளவும்
முட்டையை நன்கு அடித்து ரோல்களை அதில் நனைத்து, ப்ரெட் க்ரம்ப்ஸில் புரட்டவும்.
இதை டப்பாவில் வரிசையாக அடுக்கி ப்ரீஸரில் ஸ்டோர் பண்ணவும். 1வாரம் ஆனாலும் நன்றாக இருக்கும்.
தேவைப்படும்போது ரோல் ஐ ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து ரூம் டெம்ப்ரேச்சருக்கு வந்ததும், எண்ணெயில் மொறுமொறுப்பாக பொரித்து எடுக்கவும். பொரிக்கும் போது சிறுதீயில் வேகச் செய்தால் தான் மொறுமொறுப்பாக இருக்கும்.
சாஸுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். அசத்தலான அசல் சைனீஸ் ரோல் இது.


முட்டை சேர்க்க விரும்பாதவர்கள் முட்டைக்கு பதிலாக கார்ன்மாவைத் தண்ணீரில் கரைத்து அதில் ரோல்களை நனைத்து அதன் பிறகு ப்ரெட் க்ரம்ப்ஸில் புரட்டலாம். தோசை தவாவில் இருந்து சுலபமாக வரவும், சுவை அதிகரிக்கவும் விரும்பினால் மாவில் முட்டை சேர்க்கலாம். நாண்ஸ்டிக் தவா எனில் இன்னும் சுலபம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

SUPER TESTE EN HUS KUTTYS VIRUMPI SAPITTANGA I LIKE IT

வாவ்!அசத்தலான டிஷ்.படிக்கவே நாக்கு ஊறுதே ஆன்டி.சூப்பரா சமைப்பீங்க போல.இதெல்லாம் ரெடி பண்ணிவிட்டு ஒரு நாள் செய்து பார்க்கிரேன்.

கண்டிப்பா கே.ஆர்.அவசியம் செய்து பார்த்துட்டு எனக்கு பீட்பேக் அனுப்புங்கள்.உங்கள் இனிசியல் மட்டும் போடுகின்றீர்களே?உங்கள் பெயரை தெரிந்து கொள்ளலாமா?
ஸாதிகா

arusuvai is a wonderful website

எளிய செய்முறை... நானெல்லாம் ஸ்ப்ரிங் ரோல் செய்வேன் என்று கனவிலும் நினைத்ததில்லை !! வெளியூருக்கு போகும் முன் ஸ்ப்ரிங் ரோல் செய்து freezer இல் வைத்து விட்டு சென்றேன்... கீழே பிரிட்ஜ் இல் தேவையான சாப்பாடும் இருந்தது.... என்னத்தை சொல்ல - இதை எப்படியோ மோப்பம் பிடித்து என் கணவரும் அவர் நண்பரும் சாப்பிட்டிருக்கிறார்கள். எனக்கோ ஆச்சர்யம் - எப்படி சாப்பிட்டீர்கள் என்றால் - மைக்ரோ வேவ் செய்து சாப்பிட்டோம், நன்றாக இருந்தது என்றார்கள் :-( உனக்காக இரண்டு பீஸ் (!!) மிச்சம் வைத்திருக்கிறோம் என்றார்கள்... எனக்கு மனசே கேட்கவில்லை...

அப்புறம் இன்று தான் அந்த இரண்டையும் பொரித்து சாப்பிட்டேன் - அருமையாக இருந்தது.... எனக்கு ஒரு சந்தேகம் - செய்யும் அன்னைக்கே பொரிக்கலாமா?

இரண்டு பேர் சேர்ந்து செய்தால் (ஒருவர் வார்க்க, உடனுக்குடன் ஒருவர் ரோல் செய்ய) இன்னமும் எளிதாக இருக்கும்.... அடுத்த முறை செய்யும் போது இவர்கள் இருவரயும் துணைக்கு கூப்பிட போகிறேன் :-)

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

அன்பின் சந்தனா,
வாவ் மைக்ரோவேவில் ஸ்ப்ரிங்க் ரோல் செய்தார்களா?எனக்க அந்த முறையை சொல்லிக்கொடுங்களேன்.உண்மைதான்.இரண்டு பேர் இருந்தால் இலகுவாக இருக்கும்.
ரோல் செய்த அன்றே சாப்பிடலாம்.நான் நிறைய செய்து ஃபிரீஷரில் வைத்துவிடுவேன்.திடீர் விருந்தினருக்கு உதவும்.மிக்க மகிழ்ச்சி சந்தனா,நன்றி
ஸாதிகா

arusuvai is a wonderful website

என்னுடைய பதிவில் வர இந்த பதிவு.சாதிகா அக்கா பின்னூட்டம் வந்திருக்குன்னு ஏமாற போறாங்க.அடிக்காதீங்க அக்கா.செய்துவிட்டு சொல்றேன்.