வாழைப்பழ ரவை தோசை

தேதி: July 22, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

இந்த வாழைப்பழ ரவை தோசையை செய்து காட்டியவர், இலங்கைத் தமிழரான <b> திருமதி. நர்மதா </b> அவர்கள். இவர் இலங்கை சமையல் மட்டுமன்றி, மெக்ஸிகன், இத்தாலியன் என்று பல்வேறு நாட்டு உணவு வகைகளையும் தயாரிப்பதில் திறன் மிக்கவர். கைவினைப் பொருட்கள் செய்வதிலும் திறன் வாய்ந்தவர். தெளிவான படங்களுடன் கூடிய இவரது குறிப்புகள் மிகவும் எளிதாகவும் இருக்கும்.

 

கனிந்த வாழைப்பழம் - 2
ரவை - 1 1/4 கப்
மைதா/கோதுமை மாவு - கால் கப்
சீனி - 4 மேசைக்கரண்டி
உப்பு - 2 சிட்டிகை
நெய் - சிறிது


 

தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ரவையை போட்டு அதில் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 10 - 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
ரவை நன்கு ஊறியதும் அதில் கனிந்த வாழைப்பழத்தை உரித்து போட்டு பிசைந்துக் கொள்ளவும்.
இந்த ரவை, வாழைப்பழ கலவையை மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும்.
பின்னர் அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதனுடன் சீனி, உப்பு மற்றும் மாவு சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து 30 - 45 நிமிடங்கள் வைக்கவும்.
அதன் பிறகு அடுப்பில் தோசைக்கல்லை வைத்து ஒரு குழிக்கரண்டி மாவை எடுத்து தோசையாக வார்க்கவும்.
வெந்ததும் திருப்பி போட்டு மேலே சிறிது நெய் ஊற்றி மொறுகளாக சுட்டெடுக்கவும்.
சுவையான வாழைப்பழ ரவை தோசை தயார். இதை பீனட் பட்டர் அல்லது குழம்பு மற்றும் சம்பலுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்