நீள கத்தரிக்காய் வறுவல்

தேதி: July 23, 2008

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

நீளகத்தரிக்காய் - ஒன்று
மிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன்
சோளமாவு - 1 டேபிள் ஸ்பூன்
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப


 

நீளகத்தரிக்காயை சிறு சிறு வட்டங்களாக மெல்லியதாக நறுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் தண்ணீர் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் உப்பு போட்டு கலந்து வைக்கவும் அதில் வெட்டிய கத்திரிக்காய் துண்டுகளை போட்டு 5 நிமிடம் ஊற வைக்கவும்.
மற்றும் ஒரு பாத்திரத்தில் சோளமாவு, மிளகாய்தூள், தயிர், 1/2 டீஸ்பூன் உப்பு போட்டு விரவி வைக்கவும்.
அதில் கத்தரிக்காய் துண்டுகளை (தண்ணீரை வடித்துவிட்டு) போட்டு விரவி வைக்கவும். ஒரு அரைமணி நேரம் அப்படியே ஊற விடவும்
ஒரு ஃப்ரைபேனை அடுப்பில் வைத்து நன்றாக சூடாகும் வரை பெரிய தீயில் வைத்து விட்டு ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு மிதமான தீயில் அடுப்பை வைக்கவும்.
அதில் ஒவ்வொரு துண்டுகளாக பரப்பி வைக்கவும், 2 நிமிடத்தில் அடுத்த பக்கம் வைக்கவும் கத்தரிக்காய் நன்றாக பொரிந்து வரும் இருபுறமும் நன்றாக வெந்துவிடும்.
இதோ கத்தரிக்காய் வறுவல் தயார். சூடான ரசம் சாதம், சாம்பார் சாதம், மற்றும் தயிர் சாதத்துடன் பரிமாறவும் .


இந்த கத்தரிக்காயை எண்ணெய் குறைவாக வறுப்பதால் ஆயில் ரொம்பவும் எடுக்க கூடாது. என்பவர்கள் சாப்பிட ஏதுவாக இருக்கும், சோளமாவு சேர்ப்பதால் காரமும் அதிகம் இருக்காது குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
கத்தரிக்காயை ஏற்கனவே உப்பில் ஊற வைத்துள்ளதால் நன்றாக நைந்துவிடும். அதனால் விரைவில் வெந்துவிடும். மிளகாய்தூளுக்குப் பதிலாக சிக்கன் 65 பொடியும் பயன்படுத்தலாம் அல்லது காரம் தேவையில்லை என்றால் காஷ்மீர் மிளகாய்தூளும் பயன்படுத்தலாம். தயிருக்குப் பதில் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறையும் யூஸ் பண்ணலாம்.

மேலும் சில குறிப்புகள்