தோசைக்கல் பீஸா

தேதி: July 23, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெங்காயம் - ஒரு கப்
பீஸா பேஸ் - ஒன்று
காரட் - அரை கப்
கோஸ் - அரை கப்
தக்காளி - ஒன்று
குடை மிளகாய் - அரை கப்
மிளகாய்ப்பொடி - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
தக்காளி சாஸ் - அரை கப்
சீஸ் - கால் கப்
வெங்காயத்தாள் - அரை கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 தேக்கரண்டி


 

கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
வதங்கியதும் பொடியாக நறுக்கிய கோஸ், காரட், குடைமிளகாய், தக்காளி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கி, மிளகாய்ப்பொடி, மஞ்சள்தூள், உப்பு போட்டு வதக்கி, காய்கள் பாதி வெந்தவுடன் வெங்காயத்தாள், தக்காளி சாஸ் விட்டு கிளறி இறக்கவும்.
தோசைக்கல்லை சூடாக்கி பீஸா பேஸை வைத்து மேலே காய்க்கலவையை பரப்பி சீஸை மேலே தூவி மூடி சிறு தீயில் 5 நிமிடம் வைத்து எடுத்தால் சீஸ் ஓரளவு உருகி பீஸா தயார்.


மேலும் சில குறிப்புகள்


Comments

இதுவும் கலைஞர் டிவியில் வந்தக் குறிப்பல்லவா???