கோதுமை ரவை பொங்கல்

தேதி: July 23, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோதுமை ரவை - ஒரு கப் (அல்லது)
கோதுமையை மிக்ஸியில் ஒன்றிரண்டாக உடைக்கவும்.
நெய் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மிளகு - அரை தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
முந்திரி - 10
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி இலை - சிறிது
இஞ்சி - ஒரு சிறுதுண்டு


 

ஒரு அடுப்பில் 500 மில்லி தண்ணீரை கொதிக்கவிடவும்.
ஒரு கடாயில் எண்ணெய், நெய் விட்டு மிளகு, சீரகம் போட்டு தாளித்து பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி போட்டு முந்திரி, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை போட்டு கோதுமை ரவையை கொட்டி வறுக்கவும்.
நன்கு வறுபட்டதும் கொதிக்கும் தண்ணீரை விட்டு உப்பு போட்டு கட்டிகளில்லாமல் கிளறி உதிரியாக வந்ததும் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ருசியாக இருந்தது,ஆனால் நான் குக்கரில் 2 விசில் வைத்து செய்தேன்.நன்றி.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.