மசாலா பப்பட்

தேதி: July 24, 2008

பரிமாறும் அளவு: 5 நபர்கள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

லிஜ்ஜட் பப்பட் - 10
வெங்காயம் - 1
சிவப்புக் குடைமிளகாய் - 1
பச்சைக் குடைமிளகாய் - 1
கேரட் - 1
வெள்ளரிக்காய் - 1
காராபூந்தி அல்லது ஓமப்பொடி - 1/2 கப்
உப்பு - சுவைக்கு
பிளேக் சால்ட் - 1 டீஸ்பூன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்


 

வெங்காயம், வெள்ளரியை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கேரட்டை துருவிக் கொள்ளவும். குடை மிளகாயை பொடியாக நறுக்கவும்.
காய்களை கலக்காமல் தனித்தனியாக உப்பு சேர்க்கவும்.
பப்படத்தை மைக்ரோவேவ் அவனில் 30 செகண்ட் வைத்தால் அழகாக பொரிந்து விடும்.
அவனில் சுட்ட பப்படத்தை சர்விங் ப்ளேட்டில் வைத்து முதலில் வெங்காயத்தை தூவவும். குடை மிளகாய், வெள்ளரி, கேரட் என ஒன்றன் பின் ஒன்றாக தூவவும்.
சாட் மசாலா, பிளேக் சால்ட் ஒரு பிஞ்ச் எடுத்து தெளிக்கவும்.
கடைசியாக ஓமப்பொடி அல்லது காராபூந்தி தூவி உடனே பரிமாறவும்.
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இந்த மசாலா பப்பட் சட்டென்று செய்யக்கூடியது


சிவப்புக் குடை மிளகாய் கிடைக்காவிட்டால் நன்கு பழுக்காத சிவப்பு நிற பெங்களூர் தக்காளியை சேர்க்கலாம். லிஜ்ஜட் பப்பட்டில் மிளகு ப்ளேவர் வாங்கினால் காரமாக இருக்கும். காரம் விரும்பாதவர்கள் பிடித்த ப்ளேவரில் பப்படம் வாங்கிக் கொள்ளவும்.

மேலும் சில குறிப்புகள்