கோதுமை பாயாசம்

தேதி: July 24, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

கோதுமை ரவை - ஒரு கப்
சர்க்கரை - ஒரு கப்
பால் - 600 கிராம்
முந்திரி - 10
திரட்சை - 10
ஏலக்காய் - 5
நெய் - 3 தேக்கரண்டி
கன்டென்ஸ்ட் மில்க் - 4 தேக்கரண்டி


 

முதலில் பாலில் ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து காய்ச்சவும்.
ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு முந்திரி திராட்சையை வறுத்து எடுக்கவும். அதிலேயே கோதுமை ரவையை போட்டு சிறுதீயில் வாசனை வரும் வரை வறுக்கவும். பின் அதில் பாலை ஊற்றி மூடி வேகவைக்கவும்.
வெந்ததும் சர்க்கரை தூளாக்கிய ஏலக்காய், முந்திரி, திராட்சை போட்டு கன்டென்ஸ்ட் மில்க் ஊற்றி இறக்கவும்.


சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சர்க்கரை போடும் முன் ஒரு கிளாஸ் பாயாசம் எடுத்து ஒரு தேக்கரண்டி சுகர் ப்ரி போட்டு கொடுக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்