உளுந்து ஜாமூன்

தேதி: July 24, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

உளுந்து - ஒரு ஆழாக்கு
பச்சரிசி - 10 கிராம் (கைப்பிடியளவு)
எண்ணெய் - 300 கிராம்
சர்க்கரை - 500 கிராம்
உப்பு - தேவையான அளவு
ஏலக்காய்பொடி - ஒரு தேக்கரண்டி


 

உளுந்து, அரிசியையும் ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். தண்ணீரை வடித்து விட்டு கிரைண்டரில் ஆட்டவும்.
ஆட்டும்போது இடைஇடையில் சிறிது தண்ணீர் தெளித்து உப்பு சேர்த்து ஆட்டவும். பொங்க பொங்க ஆட்டவேண்டும். தண்ணீரை ஊற்றக்கூடாது. உளுந்து எண்ணெய் குடிக்கும்.
அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையுடன் 2 கிளாஸ் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். கரண்டியால் கிண்டி சர்க்கரையை கரைய விடவும். கரைந்ததும் கொதிக்கவிடவும்.
சர்க்கரைப்பாகு பிசுப்பிசுப்பு வரும்வரை கொதிக்கவிட்டு இறக்கவும். ஏலக்காய்பொடி (அ) எதாவது எசன்ஸ் இருந்தால் 1 சொட்டு விடவும் (அ) ஒரு துளி குங்குமப்பூ போடலாம்.
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் மாவை உருண்டையாக உருட்டி பொரித்தெடுத்து பாகில் போட்டு 1/2 மணி நேரம் ஊறவைத்து பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

சரஸ்வதி அக்கா உங்களுடைய குறிப்பில் உளுந்து ஜாமூன்மிக மிக சுவையாக இருந்தது அத்துடன் இப்படிப்பட்ட சுவையான குறிப்பை தந்ததிற்கு உங்களுக்கு என் நன்றியை தெரிவிக்கின்றேன் .

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"