கத்தரிக்காய் பொரிச்ச குழம்பு

தேதி: July 24, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

இந்த குரக்கன் ரொட்டியை செய்து காட்டியவர், இலங்கைத் தமிழரான <b> திருமதி. நர்மதா </b> அவர்கள். இவர் இலங்கை சமையல் மட்டுமன்றி, மெக்ஸிகன், இத்தாலியன் என்று பல்வேறு நாட்டு உணவு வகைகளையும் தயாரிப்பதில் திறன் மிக்கவர். கைவினைப் பொருட்கள் செய்வதிலும் திறன் வாய்ந்தவர். தெளிவான படங்களுடன் கூடிய இவரது குறிப்புகள் மிகவும் எளிதாகவும் இருக்கும்.

 

கத்தரிக்காய் - 2 (3/4 lb or 350கிராம் - 400கிராம்)
நறுக்கின வெங்காயம் - 4 மேசைக்கரண்டி
நறுக்கின உள்ளி - 4 மேசைக்கரண்டி
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
தேங்காய் துருவல் - கால் கப்
உப்பு - தேவையான அளவு
பெரிய சீரகம் (சோம்பு) - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - பொரிப்பதற்கு
மிளகாய்தூள்(கறித்தூள்) - ஒன்று அல்லது ஒன்றரை மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து


 

தேங்காய் துருவலுடன் கால் கப் தண்ணீர் ஊற்றி பிழிந்து முதற் பால் எடுக்கவும். அதன் பிறகு அதே தேங்காய் துருவலில் அரை கப் தண்ணீர் ஊற்றி பிழிந்து இரண்டாம் பால் எடுத்துக் கொள்ளவும். புளியுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து எடுத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாரான நிலையில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கத்தரிக்காயை விரல் அளவில் ஒன்றரை இன்ச் துண்டுகள் அல்லது இரண்டு இன்ச் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் நறுக்கி வைத்திருக்கும் கத்திரிக்காய் துண்டுகளை போட்டு பொரிக்கவும்.
இடையிடையே கிளறி விட்டு எல்லா துண்டுகளும் நன்கு சிவக்க பொரிந்ததும் தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெங்காயம், உள்ளி, கடுகு, பெருஞ்சீரகம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் வெந்தயம், பொரித்த கத்திரிக்காய் துண்டுகள் போட்டு 2 நிமிடம் வதக்கவும். பின்னர் புளிக்கரைசல், இரண்டாம் தேங்காய் பால், கறித்தூள், உப்பு போட்டு மூடி வைத்து கொதிக்க விடவும்.
குழம்பு நன்கு கொதித்ததும் முதலில் எடுத்த தேங்காய்பாலை ஊற்றி கிளறி விட்டு மீண்டும் கொதிக்க விடவும். குழம்பு கொதித்து கெட்டியாகி எண்ணெய் பிரியும் போது இறக்கி வைக்கவும்.
சுவையான கத்திரிக்காய் பொரிச்ச குழம்பு தயார். இதனை சாதம், இடியாப்பம், புட்டு போன்ற உணவுகளுடன் பக்க உணவாக சாப்பிடலாம்.

கத்திரிக்காயை அதிக நேரம் வறுத்தால் கசப்பாக இருக்கும். அதனால் சிவக்க பொரித்தாலே போதுமானது. வெளிநாடுகளில் அதுவும் குளிர் நிறைந்த நாடுகளில் வசிப்பவர்கள் பெரும்பாலும் தேங்காய்பால் உபயோகிப்பது இல்லை, தேங்காய்பாலிற்கு பதில் தண்ணீரிலேயே குழம்பு வைக்கலாம், ருசியாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

manikavum...ulli endral ...enaa...

vazhvae mayam

vazhvae mayam

Kurippu Nanraga ullathu

Oru anabane vendugol, Thangal Ulli enru kurupiti irrukergal athu enna.

In future, Please provide the equivalent name for the same.

உள்ளி என்றால் பூண்டு

உள்ளி என்றால் பூண்டு இல்லை சின்ன வெங்காயம்

உள்ளி என்று பூண்டைத்தான் (Garlic) இலங்கையில் கூறுவார்கள்.

உள்ளி என்றால் பூண்டுதான். நன்றி ஜாஸ்மின்..
-நர்மதா :)

We tried this recipe and we loved this. Very detailed though

நன்றி கிங்.
-நர்மதா :)