பாதாம் ரோஸ்ட்

தேதி: July 27, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பாதாம் பருப்பு - 100 கிராம்
உப்பு - 1 சிட்டிகை
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
சாட் மசாலா - 1/2 டீஸ்பூன்
பிளேக் சால்ட் - 1/2 டீஸ்பூன்
நெய் அல்லது பட்டர் - 2 டேபிள் ஸ்பூன்


 

பாதாம் பருப்பை நீரில் நனைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நெய்யை ஊற்றி அதில் மசாலா பவுடர், உப்பு வகைகளை சேர்த்து நன்கு கலக்கவும்.
இது சுமார் 1/2 மணி நேரம் ஊற வேண்டும்.
மைக்ரோவேவ் அவனில் வைக்கக் கூடிய ப்ளாட் ஆன தட்டில் பருப்பை பரப்பி, 2 நிமிடங்கள் அவனில் வைக்கவும். மறுபடி கிளறி விட்டு மேலும் 1 நிமிடம் வைக்கவும்.
ஆற விட்டு ஏர்டைட் கண்டெய்னரில் ஸ்டோர் பண்ணவும்.
இதே போல் முந்திரி, பொட்டுக் கடலையிலும் செய்யலாம்.
எண்ணெய் இல்லாத மாலை நேரத்து ஸ்நாக்ஸ்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ரொம்ப ஈஸியா இருக்கு நான் ட்ரை பண்ணி பார்க்கிறேன். ரொம்ப நன்றி

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

பின்னூட்டத்திற்கு நன்றி தனிஷா

arusuvai is a wonderful website