பலாக்கொட்டை கூட்டு

தேதி: July 27, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பலாக்கொட்டை - 25
பாசிப்பருப்பு - 100 கிராம்
வெங்காயம் - 10
சீரகம் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி - ஒரு தேக்கரண்டி
தேங்காய் - 2 சில்
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி


 

பலாக்கொட்டை வெள்ளைத்தோலை உரித்து விட்டு தண்ணீர் மூழ்கும் அளவு விட்டு உப்பு போட்டு வேக வைக்கவும்.
வெந்ததும் பிரவுன் கலர் தோலை உரித்து விட்டு பொடியாக நறுக்கவும்.
பாசிப்பருப்பை லேசாக வறுத்து தண்ணீர் விட்டு மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும்.
பாசிப்பருப்பு வெந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பலாக்கொட்டை, சீரகம், மிளகாய்ப்பொடி, சிறிது உப்பு போட்டு வேகவிடவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து கூட்டில் கொட்டி தேங்காய் சில் அரைத்து சேர்த்து கொதித்ததும் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

இங்கே பாசிப்பருப்பு என்பது பயற்றம் பருப்புத்தானே? சரஸ்வதி அக்கா இருக்கிறீங்களா? / யாராவது தெரிந்தால் கூறவும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

பாசிப்பருப்புதான் பயற்றம்பருப்பு.பயற்றம்பருப்புதான் பொங்கல் பருப்பு.பொங்கல் பருப்புதான் சிறுபருப்பு.
விளங்கிடுச்சா அதிரா

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

அதிரா அது சிறு பருப்புனு சொல்வோமே அதே பயத்தம்பருப்புதான்னு நினைக்கிரேன்.(பச்சை கலரில் இருக்குமே அது இல்லை)பொங்கல் செய்ய யூஸ் பன்னுவோமே அது.

மிக்க நன்றி கவிசிவா, தனு
என்னிடம் பொங்கல் பயற்றம் பருப்பு இருக்கிறது. போட்டுக்கொள்கிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்