கைமா கொத்துப் பரோட்டா சமையல் குறிப்பு - படங்களுடன் - 9050 | அறுசுவை


கைமா கொத்துப் பரோட்டா

வழங்கியவர் : shadiqah
தேதி : திங்கள், 28/07/2008 - 04:30
ஆயத்த நேரம் :
சமைக்கும் நேரம் :
பரிமாறும் அளவு :
0
No votes yet
Your rating: None

 

 • மைதா - 2 கப்
 • முட்டை - 2
 • கைமா - 100 கிராம்
 • வெங்காயம் - 3
 • தக்காளி - 1
 • பச்சை மிளகாய் - 3
 • எண்ணெய் - தேவைக்கு
 • கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
 • மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
 • மேகி சிக்கன் ஸ்டாக் - 1 க்யூப்
 • உப்பு - சுவைக்கு
 • மல்லித்தழை நறுக்கியது - 1/2கப்

 

தேவையான பொருட்களை தயாராய் எடுத்து வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.

மைதாவுடன் சிறிது எண்ணெய் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பின்னர் அதன் மேல் எண்ணெய் தடவி சுமார் அரை மணி நேரம் ஊற விடவும். இந்த மைதா மாவுக்கு முட்டை, பால், சமையல் சோடா தேவை இல்லை. பரோட்டா அதிகம் மிருதுவாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மாவினை சிறிய உருண்டைகளாக உருட்டி, வட்டமாக தேய்த்தெடுத்து, பரோட்டாக்கள் செய்து சுட்டு எடுக்கவும். இந்த பரோட்டக்களை நான்காக வெட்டி இளம் சூடாக இருக்கும் போதே மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றினால் பூப்பூவாக உதிர்ந்து விடும். இப்படி கொத்திய பரோட்டாக்களை முதல் நாளே தயார் செய்து ஃப்ரிட்ஜில் ஸ்டோர் பண்ணிக்கொள்ளலாம்.

அகலமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய், மல்லி அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வதக்கி, பாத்திரத்தை மூடி வைக்கவும். கைமாவை தனியே வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.

5 நிமிடங்கள் சென்றபின்பு வெந்த கைமாவைச் சேர்த்து அத்துடன் மிளகாய்த்தூள் சேர்க்கவும்.

சிக்கன் ஸ்டாக், கரம் மசாலா சேர்க்கவும். சிக்கன் ஸ்டாக் கரையும் வரை வதக்கவும்.

மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு முட்டையை உடைத்துக் கிளறவும். ஏற்கனவே வதக்கிய கலவையில் கிளறிய முட்டையை சேர்க்கவும். அத்துடன் உதிர்த்த பரோட்டாவைச் சேர்த்து பிரட்டிவிட்டு 5 நிமிடம் ஸிம்மில் வைக்கவும்.

ஐந்து நிமிடம் கழித்து இறக்கி, நறுக்கிய மல்லித்தழையினை தூவி பரிமாறவும். சிக்கன் ஸ்டாக் சேர்ப்பதால் உப்பு குறைவாக சேர்த்தாலே போதுமானது.

இப்போது சுவையான கைமா கொத்துப் பரோட்டா ரெடி. இந்த கைமா பரோட்டாவுக்கு தொட்டுக் கொள்ள ஸாஸ், ஊறுகாய் போதுமானது. அறுசுவையில் குறிப்புகள் மற்றும் பயனுள்ள ஆலோசனைகள் வழங்கி வரும் திருமதி. ஸாதிகா ஹஸனா அவர்கள் வழங்கியுள்ள செய்முறை இது.
இதனை செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்.Kaima

Portia Manohar
What is kaima?

Portia Manohar

கைமா

போர்டியா மனோஹர் அவர்களே,கைமா என்றால் கொத்திய ஆட்டிறைச்சி .இறைச்சிக் கடையில் கைமா என்றால் அவர்களே கொத்தி தருவார்கள்.இறைச்சியை சிறு,சிறு துண்டுகளாக கட் பண்ணியும் போடலாம்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

Hello shadiqah , Nice

Hello shadiqah ,

Nice recipe... Iam going to try this week... But one doubt instead of that maggi cube what will be other option? pictures are tempting me... Give more recipes like this.. Thanks in advance..

ஓஹ் தாங்கள்தானா?

சாதிகாலாத்தா உங்க குறிப்பா இது இப்பதான் கவனித்தேன் அருமையா இருக்கு..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

கைமா பரோட்டா

நன்றி பிரியா.உங்கள் பின்னூட்டத்திற்கு.மாகி சிக்கன் கியூப் போடாமலும் செய்யலாம்.கியூப் போடாவிட்டால் உப்பை சற்று அதிகமாகப் போடவும்.
மர்ழி,அவசியம் செய்து பார்த்துவிட்டு பின்னூட்டம் அனுப்புங்கள்.

arusuvai is a wonderful website

Thanks Shadiqah

Portia Manohar
Oh minced lamb. Will post the comments soon.Thanks.
Take Care.

Portia Manohar

கைமா கொத்து பரோட்டா

ஸாதிகா லாத்தா சுகமா. வீட்டில் எல்லாரும் சுகமா.ஆமிர் எப்படி இருக்கிறார்.ஈத் நல்ல முறையில் கொண்டாடினீர்களா.இன்று உங்கள் கைமா கொத்து பரோட்டா செய்தேன் சூப்பராக இருந்தது அக்கா.ஹஸ்ஸும் நல்லா இருக்குன்னு சொன்னாங்க.நான் சிக்கன் பரோட்டா,முட்டை பரோட்டா,ஆனியன் வித் முட்டைலாம் செய்து இருக்கேன் ஆனால் கைமா மற்றும் சிக்கன் கியூப் போட்டு சற்று டிப்ரெண்டாக இருந்தது குறிப்புக்கு நன்றி அக்கா.

அன்புடன் கதீஜா.

கதீஜா-கைமா கொத்து பரோட்டா

கதீஜா நான் நலம்.ஆமிரும் நலம்.நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள்?இன்ஷாஃப் எப்படி இருக்கின்றார்.கொத்துபரோட்டா செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பி இருக்கின்றீர்கள்.மிக்கநன்றி.உங்களுக்கும்,உங்கள் ஹஸ்சுக்கும் பிடித்து இருந்தது குறித்து மகிழ்ச்சி.மர்லி இடம் ஐ டி வாங்கி என்னை தொடர்பு கொள்ளுங்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

சிக்கன் ஸ்டாக்

என்னப்பா,கவிதை மழை பொழிந்த நீங்கள் இப்போது சமையல் பக்கம் தலை காட்டி இருக்கின்றீர்கள்.ஒஹ்...செவிக்கு உணவு.அப்புறம் வயிற்றுக்கு இரை..மாகி சிக்கன் கியூப் என்பது மாகி நிறுவனத்தில் தயாரிக்கின்றனர்.நார் நிறுவனத்திலும் சூப் கியூப் த்யாரிக்கின்றனர்.இது அனைத்து சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைக்கும்.ஹலால் தான்.கைமா கொத்துபரோட்டா முதல் படத்தை பாருங்கள்.அதில் மாகி சிக்கன் கியூப்(சிக்கன் ஸ்டாக்) இருக்கும்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

சுஹைனா

சுஹைனா,சிக்கன் ஸ்டாக் என்றால் சிக்கனுக்கு போடுவது அல்ல.சிக்கன் மற்றும் மசாலா கலந்த கியூப் வடிவில் இருக்கும்.நான் இந்தியன் கம்பனியில் தயாரித்தது உபயோகித்ததில்லை.அரப் கண்டிரியில் இருந்து வரும் சிக்கன் ஸ்டாக் மீது ஹலால் முத்திரை குத்தப்பட்டு இருக்கும்.இது இல்லாமலும் சமைக்கலாம்.அறுசுவையில் இப்போ அடிக்கடி காண முடிவதில்லை.ஹஜ் ஆயத்தங்கள் நடந்து கொண்டிருக்கும் என நினைக்கின்றேன்,
ஸாதிகா

arusuvai is a wonderful website