சொல்லுங்க பயோ(ய)டேட்டா

அறுசுவையின் அன்பு தோழிகள் அனைவரும் தங்களை பற்றிய சுவாரசியமான தகவல்களை இப்பகுதியில்

பகிர்ந்துக்கொள்ள வேன்டுகிறேன்.

இதன் மூலம் நாம் அனைவரையும் அறிந்துக்கொள்ள எளிதாக இருக்கும் என எண்ணுகிறேன்.

என்றும் உங்கள் நண்பி,..

ஆசியா ஷாஹுல்

பெயர்:ஆசியா
கல்வி:பி.எஸ்ஸி,{அக்ரி}
கணவர்; உமர்.இஞ்சினியர்,அபுதாபி,டிரான்ஸ்கோ
மகன்:ஷகீல்,பத்தாம் வகுப்பு.
மகள்:ருமானா,எழாம் வகுப்பு.
சொந்த ஊர்:திருநெல்வேலி.
இப்ப அபுதாபியில் இருக்கிறோம்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்..

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

உங்க எல்லோருடைய பயோடேட்ட்டாபடிக்க நல்லா இருக்கு.என்னுடையது ஒழுங்கா எழுத இப்போ தான் சரியான மனநிலை.ஆனால் பிறந்தநாள் தேதி திருமணநாள் என்ற டேடாஸ் கொடுக்க மாடேன் கொஞ்சம் பயம் தான்.

பெயர் - ருபீனா
வயது - 21க்கும் 28 க்கும் நடுவில்
குழந்தை - ரீமா 2.5 வயது
வசிப்பது - அபு தாபியில்
பொழுதுபோக்கு - எதெதுவோ செய்ய இருக்குங்க.ஆனால் போழுது சீக்கிரமா போயிடுது.படிப்பது,சர்ஃபிங்,வீட்டை சுத்தம் செய்வது,மகளுடன் விளையாடுவது ரொம்ப பிடிக்கும்
பலம் - பட்டென யார் எவர் என பார்க்காமல் கிட்னியை வேனா கொடுத்துடுவேன் ஆனால் அதுவே பலவீனமும் கூட..இன்றைய சூழலில் அப்படிப்பட்டவர்களை இளிச்சவாய் என முத்திரை குத்தி அவர்களுக்கு வேண்டிய உதவி கிடைத்ததும் நைசாக கழ்ட்டி விட்டு நம் தலையையே அறுத்துக் கொண்டு ஓடும்பொழுது அது எனது பலவீனம் என நினைத்துக் கொள்வேன்
மகிழ்ச்சி - அடிக்கடி என் குடும்பத்தை நினைத்து மகிழ்வேன் .ஆனால் என் கணவர எப்போவாவது சண்டை போட்டால் நல்ல மனசுக்குள்ளேயே திட்டி சங்கடப்படுவேன்
ஆசை - என் கனவரது தாராள மனசை எப்படியாவது கட்டுப்படுத்தி எல்லோரையும் போல நல்ல க்லெவெரா வாழ கற்றுக் கொடுக்கனும்

குறிக்கோள் - நல்ல மனைவியாக இல்லாட்டாலும் நல்ல அம்மாவாக என் குழந்தைகளது முன்னேற்றத்திற்கு வாழ்க்கை முழுக்க தூண்டுகோலா இருக்க முடியனும்

இன்னொரு ஆசை - வெளிநாட்டு வாழ்க்கை ரொம்ப பிடித்திருக்கிறது ஆனால் குடும்பம் என்னுடன் இல்லாத வருத்தம் தீருவதே இல்லை என்றாவது நம் இந்தியா இந்நாடு மாதிரி ஓரளவாவது அட்லீஸ்ட் சாலைவிதியையாவது ஒழுங்கா கடைபிடிக்கும்பொழுது ஊர் திரும்பனும்

ஹாய் தளிகா எப்படி இருக்கிங்க என்ன இது சின்ன புள்ளதனமா பிறந்த தேதி,திருமண நாள் தேதி கொடுக்க மாட்டேன் என்று அடம் பிடிப்பது. நான் பாருங்க வெரும் தேதி மட்டும் தான் கொடுத்து இருக்கென்....உங்கள் ஆசை சின்ன ஆசை இல்ல பெரிய ஆசை இன்ஷா அல்லாஹ் பார்க்கலாம்.ரூபினா பெயர் நல்லா இருக்கு.

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

sohara rizwana
SMILING IS A GUD MEDICINE 2 ALL

சுஹைனா,18 வது அரட்டை திரட்டில் உஙக்ள் பையோ டேட்டா வை அப்படியே பேஸ்ட் பண்ணி,இந்த திரட்டில் காப்பி பண்ணுங்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

எல்லோருக்கும் வணக்கம், எனது பையோ டேட்டா
பெயர் : சுதாராணி
ஊர் : இராசிபுரம்
படிப்பு : BSMS (siddha medicine), PhD (yoga & allied sciences)
கணவர் பெயர் : முத்துக்குமரன்
ஊர் : பாண்டிச்சேரி
படிப்பு : PhD (chemistry)
பணி : Scientist
மண நாள் : செப்ட 10, 2003
குழந்தை : ரியா (2 வயது)
பிறந்த நாள் : அக்டோ 15, 2005
வசிப்பது: North Carolina, USA
பொழுதுபோக்கு: புதுவகையான சமையலை ட்ரை பண்ணுவது, நண்பர்களுடன் அரட்டை அடிப்பது.

பெயர் :ஜெயஸ்ரீ

பிறந்த தேதி:28.10.79

திருமண நாள்:07.06.2006

வசிக்குமிடம் : Reston, Virginia

சொந்த ஊர்:கோவை

படிப்பு : B.Com., MCA, CA

கணவர்பெயர்: ஹரிஹரன்

படிப்பு : B.E., MS (Civil)

கணவர் வேலை : Civil Engineer

ஆதங்கம்: வேலை போகமல் வீட்டில் இருப்பது (H4 கைதி தான் )

வேலை : friends தேடுவது.

அன்புடன்
ஜெயஸ்ரீ

நான் சமீப காலமாக அறுசுவை .காம் பார்த்து வருகிறேன். இதில் நிறைய பயனுள்ள குறிப்புகள் மற்றும் பல்வகை உணவுகள் அணைத்தும் நிறைய தோழிகள் மற்றும் சகோதரிகள் வழங்கி உள்ளனர்.இதில் நானும் என்னுடைய முகவரியை தந்து இனி உங்களுடன் என்னுடைய கருத்து மற்றும் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிறேன்.

என்னையும் உங்க தளத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள்

பெயர்: ஸ்ரீவைஷ்னவி

பிறந்த தேதி: 12.04.1982

திருமண நாள்: 27.02.2008

வசிக்குமிடம்: Detorit

சொந்த ஊர்: கோவில்பட்டி

படிப்பு: B.Com MCS

கணவர்பெயர்: ராஜ்குமார்

படிப்பு: BE

கணவர் வேலை: கணிணி பொரியாளர்

ஆதங்கம்: வேலை போகமல் வீட்டில் இருப்பது (H4)

பிடித்தது: புத்தகம் படிப்பது,பாடல் கேட்பது,இணய தளத்தில்,சமையலை ட்ரை பண்ணுவது,

வெறுப்பது: தனிமை

vaishu

vaishu

உங்களை இங்கே எல்லா தோழிகள் சார்பாகவும் அன்போடு வரவேற்கிறோம்.விடுகதை பகுதியில் கூட பார்த்தேன்.நல்லா கலக்குங்க மற்ற எல்லா பகுதிகளிலும் சேர்த்து..

நன்றி சுகண்யா... பட்டிமன்றத்தில் அழகான கருத்துக்களை முன்னிறுத்தி வாதிட்டீர்கள்... அருமை, அனைத்து சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள்.

vaishu

ஒரு சந்தேகம் ஆசியா. என் நாத்தினார்[அவருடைய தங்கை] தங்க நகை வாங்கி வரும்படி பணம் தருகிறாள். அங்கு வாங்களாமா. பணத்தை வாங்கிவிட்டு, வாங்கமுடியாது என்றால் கஷ்டம். விரைவில் பதில் கிடைத்தால் நல்லது. எனக்காக உடனே பதில் தரவும்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

மேலும் சில பதிவுகள்