உப்புச்சீடை[2]

தேதி: July 30, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

அரிசிமாவு - ஒரு கிலோ
உளுந்துமாவு - கால் கிலோ
தேங்காய் - ஒன்று
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - 100 கிராம்
எண்ணெய் - 500 கிராம்


 

தேங்காயை ஆட்டி பாலெடுத்துக் கொள்ளவும். அரிசிமாவையும், உளுந்து மாவையும் சலித்து கொள்ளவும்.
மாவுடன் உப்பு, வெண்ணெய், தேங்காய்ப்பால் விட்டு உருட்டும் பக்குவத்திற்கு பிசையவும்.
எல்லாவற்றையும் உருட்டவும். கடாயில் எண்ணெய் சூடானதும் பொரித்தெடுக்கவும். எண்ணெய் சலசலப்பு அடங்கினால் சீடை வெந்திருக்கும்.


எண்ணெய் அதிகம் சூடேற்றக்கூடாது. அதாவது புகை வரும் அளவுக்கு காயவிடக்கூடாது. சீடை வெடித்து சிதறி விடும். எள் போடுவதென்றால் 100 கிராம் எள்ளை வெறும் வாணலியில் சிறு தீயில் பொரித்து பிசையும் போது சேர்த்து கொள்ளலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அம்மா,உப்பு சீடை செய்து பார்க்க ஆவல்.வெண்ணெய் என்றால்,unsalted butter தானே உபயோகிக்க வேண்டும். ரெடிமேட் கட்டியான தேங்காய்பால் என்றால் எவ்வளவு ml உபயோகிக்க வேண்டும்.கருப்பு எள் தானே.உங்கள் பதில் கண்டதும் செய்ய விரும்புகிறேன்.நன்றி.

பட்டர்தான். அது என்ன உப்பில்லாத பட்டர், உப்புள்ள பட்டர் என்று கிடைக்குதா, அதைப்பற்றி தெரியாது. ஆனால் பட்டர்தான் வெண்ணை. 200மிலி தேங்காய்ப்பால் சேர்க்கலாம். வெள்ளை எள், கருப்பு எள் எது கிடைக்குதோ அதை சேர்க்கலாம்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

அம்மா,

இதில் அரிசி மாவு என்பது பச்சரிசி மாவு தானே(கொழுக்கட்டைக்கு நீங்கள் பயன்படுத்த சொன்ன மாவு தானே?).

அரிசி மாவு வறுத்தா உபயோகிக்க வேண்டும்.

அரிசி மாவு போல் ரெடிமேடாக உளுந்து மாவும் கடையில் கிடைக்குமா.உங்கள் பதில் கண்டதும் இரண்டொரு நாளில் செய்ய விரும்புகிறேன்.நன்றி.

இரண்டு மாவிலும் செய்யலாம். வறுக்கவேண்டாம்.
புழுங்கலரிசி ஆட்டி செய்யும் உப்புச்சிடை ரெசிப்பி கொடுத்திருக்கிறேன். அது மிகவும் நன்றாக இருக்கும்.
சரி. இதை செய்து பின்னூட்டம் அனுப்புங்கள். தாங்கள் எங்கு இருக்கிறீர்கள். சொந்த ஊர் எது.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை

பதிலுக்கு மிகவும் நன்றி.என்னை ஒருமையிலேயே அழையுங்கள் அம்மா,ப்ளீஸ்.தற்போது ஜெர்மனியில் இருக்கிறேன்.சென்னை.

தொந்தரவுக்கு மன்னிக்கவும்,கொஞ்சம் விளக்கம் தாருங்க ப்ளீஸ்,பச்சரிசி மாவு,புழுங்கலரிசி மாவு இரண்டில் எதில் செய்தால் சுவையாக இருக்கும்.

பச்சரிசி மாவு போல் உளுந்து மாவும் ரெடிமேடாக கடையில் கிடைக்குமா.நன்றி.

இதில் என்ன தொந்தரவு. நான் எப்போதுமே உளுந்து ஆட்டிதான் செய்வேன். மாவு, கோதுமை மாவு, மிளகாய்பொடி போன்ற என்ன தேவையோ மிஷினில்தான் அரைப்பேன் இந்தியாவில் இருப்பதால். பச்சரிசி மாவில்தான் சீடை நன்றாக இருக்கும். ஆனால் புழுங்கலரிசியில் செய்வது நன்றாக இருக்கும். சாமிக்கு நெய்வேத்தியம் செய்வது பச்சரிசியில் செய்வதுதான்.ஜெர்மனியில் கிடைக்கிறதா என்று முயற்சி செய்து பாருங்களேன்.ஒருமையில் அழைத்தால் எல்லோரிடமும் அவ்வாறு வந்து விடும்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை