இனிப்புச்சீடை

தேதி: July 30, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

பச்சரிசி மாவு - ஒரு கிலோ
வெல்லம் - 600 கிராம்
எண்ணெய் - 500 கிராம்


 

அரிசிமாவை சலித்துகொள்ளவும். வெல்லத்தை தூளாக்கி 1/4 கிளாஸ் தண்ணீர் விட்டு பாகு காய்ச்சவும். மாவில் பாகை ஊற்றி பிசையவும்.
மாவை 1 நாள் வைத்திருந்து விட்டு பெரிய கோலிக்குண்டு அளவு உருட்டிக்கொள்ளவும்.
எண்ணெயை சூடாக்கி சீடையை மிதமான தீயில் பொரிக்கவும்.


சின்ன உருண்டைகளாக உருட்டினால் எண்ணெயில் கருகிவிடும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

கடையில் விற்கும் அரிசி மாவே உபயோகிக்கலாமா? வெல்ல பாகு எந்த பதத்தில் இருக்க வேண்டும்? அதிரசத்திற்கு காய்ச்சியது போல போதுமா? தயவுசெய்து சொல்லுங்கள்..நாளை(சனிகிழமை) செய்யலாம் என்று இருக்கிறேன்...

நன்றிங்க உங்கள் குறிப்புக்கு..இப்போ தான் செய்து முடித்து சாப்பிட்டு வந்தேன்..நன்றாக வந்தது,எல்லோரும் விரும்பி சாப்பிட்டோம்..மீண்டும் நன்றி..