மனகோலம்

தேதி: July 30, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 2 (1 vote)

 

பாசிப்பருப்பு - 4 ஆழாக்கு (3/4 கிலோ)
பொட்டுக்கடலை - ஒரு ஆழாக்கு (200 கிராம்)
தேங்காய் - ஒரு மூடி
வெல்லம் - 4 ஆழாக்கு (3/4 கிலோ)
டால்டா - 3/4 கிலோ
சர்க்கரை - ஒரு ஆழாக்கு (200 கிராம்)
நெய் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு


 

பாசிப்பருப்பை வறுத்து மிஷினில் அரைத்து சலிக்கவும். தேங்காயை மிகப்பொடியாக நறுக்கி ஒரு தேக்கரண்டி நெய் விட்டு வதக்கி எடுத்து கொள்ளவும்.
மறுபடியும் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு பொட்டுக்கடலையை சிறு தீயில் வறுத்து கொள்ளவும்.
பாசிப்பருப்பு மாவுடன் தேவையான உப்பு போட்டு தண்ணீர் சிறிது விட்டு பிசையவும்.
கடாயில் டால்டாவை சூடாக்கி மாவை முறுக்கு அச்சில் போட்டு பிழிந்து வெந்தது எடுக்கவும். எல்லாவற்றையும் பிழிந்து எடுத்து கையால் உதிர்த்து விடவும்.
அதனுடன் வதக்கிய தேங்காய், பொட்டுக்கடலை ஆகியவற்றை ஒரு தட்டில் கொட்டி பரப்பி கொள்ளவும்.
வெல்லத்தில் சிறிது தண்ணீரை தெளித்து பாகாக்கி மனகோலத்தில் கொட்டி கரண்டியால் கிளறி, சர்க்கரையை பொடித்து தூவி அப்படியே காயவிடவும். இதை ஏர்டைட் கன்டெய்னரில் போட்டு மூடி வைத்து கொள்ளலாம்.


இதுவும் செட்டிநாட்டு ஏரியாவில்தான் கிடைக்கிறது. செட்டிநாட்டு முறுக்கு கட்டையில், மிக்சர் கட்டையின் துவாரத்தை விட சற்று பெரிதாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

இந்த மனக்கோலம் என் பிரெண்டு வீட்டில் சாப்பிட்டிருக்கேன். யுனிவர்சிட்டியில் என் கிளாஸ்மேட்ஸ் நிறைய பேர் செட்டிநாடு பக்கம். அதுவும் என்னோட கிளாஸ்மேட் ரஞ்சனியின் அம்மா விதவிதமா செட்டிநாட்டு சமையல் செய்வாங்க.அவங்க வீட்டுக்குப் படிக்கப் போகும்போது இந்த நொறுக்குத்தீனியெல்லாம் சாப்பிடுவோம். நான் இங்கே ஆஸ்திரேலியாவில் பிரெண்ட்ஸோடலாம் இல்லை. கல்யாணம் ஆகி, ஒரு குட்டி பையனோட, அவன் வால்தனத்தை சமாளிச்சுட்டு இருக்கேன். நீங்க தீபாவளிக்கு வரும்போது கட்டாயம் வாங்க. என் அட்ரஸை அப்போ உங்களுக்கு மெயிலில் அனுப்பிடறேன். இப்போ வராம குளிரிலிருந்து தப்பிச்சுட்டீங்க. லேட்டான ரிப்ளைக்கு சாரி

நான் வந்த இரண்டு முறையும் குளிர்காலம்தான்[MAY,JUNE] ]
அதனால் இந்த முறை சம்மரில் வரலாம் என்று இருக்கிறோம்.
கட்டாயம் வருகிறோம். வந்தால் தெரிவிக்கிறேன் தீபாவளிக்கு வாருங்கள்.

திருமதி சரஸ்வதி திருஞானசம்பந்தம், மதுரை