சிக்கன் சாண்ட்விச்

தேதி: August 2, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ப்ரெட் ஸ்லைஸ் - 1 பாக்கெட்
மயோனைஸ் - 2 டேபிள் ஸ்பூன்
பட்டர் - 2 டேபிள் ஸ்பூன்
கோஸ் - 100 கிராம்
பீன்ஸ் - 6
கேரட் - 1
வெங்காயம் - 1
அவித்த சிக்கன் - 1 கப்
மேகி சிக்கன் ஸ்டாக் - 1 கியூப்
மிளகுத் தூள் - சிறிது


 

வேக வைத்த கோழியை எலும்பை நீக்கி சிறு துண்டுகளாகவும்.
காய்களை பொடியாக நறுக்கவும்.
சிறிது வெண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கி, மற்ற காய்களையும் சேர்த்து வதக்கவும்.
அத்துடன் சிக்கன் ஸ்டாக் சேர்க்கவும். விரும்பாதவர்கள் அதை தவிர்த்து சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
வெந்த சிக்கனை சேர்த்து நன்கு கிளறி விடவும். இறக்கும் பொழுது மிளகுத் தூள் சேர்க்கவும்.
ப்ரெட்டை எடுத்துக் கொண்டு ஒரு ஸ்லைஸில் பட்டரும், இன்னொரு ஸ்லைஸில் மயோனைஸ் தடவி நடுவில் கலவையை வைத்து சாண்ட்விச் மேக்கரில் வைத்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

சிக்கன் சேர்த்து ஒரு முறையும் சிக்கன் இல்லாமல் ஒரு முறையும் (lettuce, வெள்ளரி வைத்து) செய்து விட்டேன்... சத்தான சுவையான சாண்ட்விச்... பிரேக் பாஸ்ட்டு க்கு ஏற்றது..

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

தங்கை சந்தனா,
பின்னூட்டத்திற்கு நன்றி.கலவையை முதல் நாளே செய்து பிரிட்ஜ்ஜில் வைத்து விடுவேன்.காலையில் சுலபமாக செய்ய முடியும்.மிகவும் ஈஸியான காலை டிபன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website