வெஜ் கொழுக்கட்டை

தேதி: August 4, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அரிசிமாவு - ஒரு ஆழாக்கு (200 கிராம்)
உருளைக்கிழங்கு (வேகவைத்தது) - ஒன்று
காரட் - 50 கிராம்
பீட்ரூட் - 50 கிராம்
வெங்காயம் - ஒன்று
வரமிளகாய் - 5
தேங்காய் - ஒரு சில்
பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
எலுமிச்சைச்சாறு - ஒரு தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு


 

அடிகனமான பாத்திரத்தில் 4 கிளாஸ் தண்ணீரை கொதிக்கவிட்டு 1 தேக்கரண்டி எண்ணெய் விடவும். அதில் மாவை சிறிது சிறிதாக போட்டு கட்டி தட்டாமல் மரக்கரண்டியால் கிளறவும்.
மாவு இறுகி உருண்டு வரும்போது கையால் தண்ணீரை தொட்டு மாவை தொட்டால் ஒட்டாமல் வந்தால் இறக்கி ஆறவைக்கவும்.
வரமிளகாய், தேங்காய்சில், பொட்டுக்கடலை ஆகியவற்றை அரைக்கவும்.
காய்கறிகளை பொடியாக நறுக்கி, அரைத்த மசாலா, பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு, உப்பு ஆகியவற்றுடன் பிசறி வைத்து கொள்ளவும்.
கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கி பிசறிய காய்களை போட்டு மசாலா வாசனை போகும் வரை சிறுதீயில் வதக்கவும். எலுமிச்சைசாறு விட்டு கிளறி இறக்கவும்.
மாவை கையில் எண்ணெய் தொட்டு எலுமிச்சையளவு எடுத்து தட்டி நடுவில் 1 தேக்கரண்டி வெந்த காயை மூடி ஓரங்களை மடித்து விடவும் (அ) சோமாஸ் கட்டர் வைத்து கட் பண்ணலாம்.
எல்லாவற்றையும் செய்து வைத்து கொண்டு இட்லி சட்டியில் வைத்து வெந்தவுடன் எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

சரஸ்வதி மேடம் நலமா?நான் இன்றுதான் உங்களிடம் பேசுகிறேன்...ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் கூட்டாஞ்சோறு பகுதியில் மேலிருந்து கிழாக ஒவ்வொருவரின் சமையலை செய்து கொண்டு வருகிறோம்....இது தோழி அதிரா தொடங்கியது.8 தேதியில் இருந்து ஒரு வாரத்துக்கு உங்கள் சமையல் குறிப்புகளை செய்ய இருக்கிறோம்,

உங்கள் குறிப்பில் எங்களுக்கு ஏது சந்தேகம் இருந்தால் உங்களை தவிர யாராலும் தீர்க்க முடியாது...அதனால் எங்களுக்கு உதவ நீங்கள் ஓடோடி வரவும்..என்று அன்போடு அழைக்கிறோம்..

உங்களுக்கு மேலும் விவரம் தெரிய மன்றத்தில் சமைத்து அசத்தலாம் என்ற பகுதியை பாருங்கள்.உங்கள் பதிலுக்காக காத்து கொண்டு இருக்கிறேன்...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா