உருளைக்கிழங்கு சாதம்

தேதி: August 4, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

இந்த உருளைக்கிழங்கு சாதத்தை செய்து காட்டியவர், இலங்கைத் தமிழரான <b> திருமதி. நர்மதா </b> அவர்கள். இவர் இலங்கை சமையல் மட்டுமன்றி, மெக்ஸிகன், இத்தாலியன் என்று பல்வேறு நாட்டு உணவு வகைகளையும் தயாரிப்பதில் திறன் மிக்கவர். கைவினைப் பொருட்கள் செய்வதிலும் திறன் வாய்ந்தவர். தெளிவான படங்களுடன் கூடிய இவரது குறிப்புகள் மிகவும் எளிதாகவும் இருக்கும்.

 

உருளைக்கிழங்கு - 3
அரிசி (பொன்னி/பாசுமதி/ஜஸ்மின்) - 1/2 கப்
வெங்காயம் - 2
பூண்டு - 4 பல்
கறித்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - சிறிது
மிளகாய் வற்றல் - 2
கடுகு - சிறிது
பெருஞ்சீரகம் - சிறிது
உளுத்தம் பருப்பு - சிறிது
கடலைப்பருப்பு - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
முந்திரி - சிறிது
நிலக்கடலை - சிறிது
திராட்சை - சிறிது
கொத்தமல்லி தழை - சிறிது


 

அரிசியை களைந்து குக்கரில் வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பூண்டு, வெங்காயம் இரண்டையும் தோல் உரித்து சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கை இரண்டாக நறுக்கி போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
வேக வைத்த உருளைக்கிழங்கை எடுத்து தோல் உரித்து மசித்துக் கொள்ளவும். அதில் கறித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயம், பூண்டு, மிளகாய் வற்றல் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் அதில் கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, உப்பு சேர்த்து வதக்கவும்.
பிறகு அதில் மசித்த உருளைக்கிழங்கு கலவையை போட்டு பிரட்டி விடவும்.
இந்த உருளைக்கிழங்கு கலவையுடன் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் சாதத்தை சேர்த்து நன்கு ஒன்றாகும்படி கிளறி இறக்கவும். தேவைப்பட்டால் ருசிக்கு ஏற்றவாறு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி அதில் முந்திரி, திராட்சை, நிலக்கடலை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
சுவையான உருளைக்கிழங்கு சாதம் தயார். பரிமாறும் போது ஒரு தட்டில் சாதத்தை வைத்து மேலே வறுத்த முந்திரி, திராட்சை, கடலை மற்றும் கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

விரும்பினால் வெங்காயம் வதக்கும் போது ஒரு தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கி போட்டு வதக்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

what is currythool? i have seen ur recipes , those are really tasty recipes, thanx for giving new.

bye
uma

உமா, கறித்தூள் குறிப்பு இதில் உள்ளது பார்க்கவும். http://www.arusuvai.com/tamil/node/5936 . கறித்தூள் இல்லாவிட்டால் மிளகாய்த்தூள் + மல்லி(தனியா) தூள் + சீரகதூள் கலந்தும் போடலாம்.
எனது குறிப்புகளை பாராட்டியமைக்கு நன்றி.
-நர்மதா :)

தெளிவான படங்களோடு செய்வதற்கு எளிதான குறிப்புகளை தொடர்ந்து கொடுத்து வரும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். உங்கள் குறிப்புகள் எல்லாவற்றையும் செய்து பார்த்துவிடுவேன். எல்லாமே அருமை. தொடரட்டும் உங்கள் பணி.

வணக்கம் திருமதி நர்மதா, உருளைக்கிழங்கு சாதம் செய்து சாப்பிட்டேன்.மிகவும் சுவையாக இருந்தது.மிக்க நன்றி.

நன்றி சேகர் & மாருஷா.
-நர்மதா :)

its good yar..
keep rocking..

With luv,
nithi

BE BORN EVERYDAY :)

With luv,
nithi

BE BORN EVERYDAY :)

ஹாய் நர்மதா,உங்க உருளை கிழங்கு சாதம் சூப்பர்.என் கணவர் விரும்பி சாப்பிட்டார்.எனக்கும் மிகவும் பிடித்திருந்தது.கறித்தூளுக்கு பதில் நீங்க சொன்ன மற்ற அனைத்தும் கலந்துகொண்டேன்.மிகவும் அருமை.