சிறுகீரை பொரியல்

தேதி: August 7, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிறுகீரை - ஒரு கட்டு
வெங்காயம் - 50 கிராம்
வரமிளகாய் - 2
பாசிப்பருப்பு - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தேங்காய்ப்பூ - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி


 

பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், கிள்ளிய வரமிளகாய் போட்டு வதங்கியதும், பொடியாக நறுக்கிய கீரை, பாசிப்பருப்பு போடவும்.
சிறிது வதங்கியதும் தண்ணீர் தெளித்து வேகவிடவும். வெந்ததும் உப்பு போட்டு கிளறி தேங்காய்ப்பூ போட்டு கிளறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் தண்ணீர் உற்ற தேவை இல்லயா? வெந்துடுமா?