ஈஸி கேரட் பொரியல் (குழந்தைகளுக்கு)

தேதி: August 8, 2008

பரிமாறும் அளவு: 3

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கேரட் - ஒன்று (பெரியது)
தேங்காய் துருவல் - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 5 இலைகள்
உப்பு - தேவையான அளவு


 

கேரட்டை தோல் நீக்கி சிறுசிறு கட்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கறிவேப்பிலை, கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளித்து விட்டு, கேரட்டையும் போட்டு நன்றாக வதக்கவும்.
கேரட்டில் 1/2 கப் தண்ணீர் விட்டு, மஞ்சள் தூள் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு வேக வைக்கவும்.
கேரட் வெந்து தண்ணீர் வற்றி வரும் போது தேங்காய்த்துருவல் போட்டு கிளறி இறக்கவும்.


பேச்சுலர்ஸ் இந்த கேரட் பொரியல் செய்ய மிகவும் ஈஸி காரம் அதிகம் இல்லாததால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

மேலும் சில குறிப்புகள்


Comments

மஹாபிரகதீஸ் உங்களுடைய குறிப்பில் இருக்கும் ஈஸி கேரட் பொரியல் மிகவும் நன்றாக இருந்தது.
பெயரை போல செய்யவும் ஈசியாக இருந்தது.

நன்றி
ஸ்வர்ணா

நன்றிகளுடன்
ஸ்வர்ணா

இந்த குறிப்பினை பார்த்து திருமதி. ஸ்வர்ணலெஷ்மி அவர்கள் தயாரித்த ஈஸி கேரட் பொரியலின் படம்

<img src="files/pictures/aa300.jpg" alt="picture" />

ஈஸி காரட் பொரியல் செய்வதற்கு எளிதாகவும் சுவையாகவும் இருந்தது
நன்றிகளுடன்,
லக்ஷ்மிஷங்கர்