கோவக்காய் குழம்பு

தேதி: August 9, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

கோவக்காய் - கால் கிலோ
வெங்காயம் - 50 கிராம் (1)
தக்காளி - 50 கிராம்
புளி - எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி - ஒரு தேக்கரண்டி
மல்லிப்பொடி - ஒரு தேக்கரண்டி
சாம்பார் பொடி - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
பூண்டு - 4 பல்


 

கோவக்காயை வட்டமாகவும், சிறிது கனமாகவும் நறுக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் தாளித்து நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு போட்டு வதக்கி, காயை போட்டு நன்கு வதக்கவும்.
காய் ஓரளவு வதங்கியதும் மிளகாய் பொடி, மல்லிப்பொடி, சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு போட்டு கிளறி புளியை கரைத்து விட்டு கொதிக்கவிடவும். கொதித்து குழம்பு மசாலா வாசனை போய் வற்றியதும் இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்